கடனில் சிக்கிக் கொண்டிருக்கும் அரசாங்கத்தின் முதலீட்டு நிறுவனமான 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் பற்றி சரவாக் ரிப்போர்ட்டில் வெளியிடப்பட்ட ஆவணங்களையும் மின்னஞ்சல் தொடர்புகளையும் அடிப்படையாக வைத்து போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது. டிஏபி எம்பிகள் கோபிந்த் சிங் டியோவும் டோனி புவாவும் அப்புகாரைச் செய்தனர்.
இந்தப் புகார்மீது சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்ல் தனிக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோபிந்த் கேட்டுக்கொண்டார்.
அடுத்த வார நாடாளுமன்றக் கூட்டத்தில் இவ்விவகாரத்தை எழுப்பப் போவதாகவும் அவ்விருவரும் கூறினர்.
செத்தான் நம்பிக்கை நாயகன். இதுவே அவரின் சவப் பெட்டியின் மீது அடிக்கப்போகும் இறுதி ஆணியாக இருக்கும்.
இதைத்தான் பகல் கொள்ளை அல்லது வெள்ளை காலர் கொள்ளை என்று அழைப்பார்களோ???? இதுவரையில் ஆளும் கட்சியோ அல்லது அரசாங்கமோ தெளிவான கூற்றை வெளியிட வாயைத் திறக்கவே இல்லை. மௌனம் சம்மத்துக்கு / இணக்கத்துக்கு சமம். என்ன சரிதானே ஷாந்தி/ சிவா கணபதி அவர்களே???