பாஸ் கட்சியில் 32-ஆண்டுக்காலமாக ஒருவரை மட்டுமே தலைவர் பதவிக்கு வேட்பாளராகப் பரிந்துரைக்கும் பாரம்பரியம் இருந்தாலும் அதைத் தொடர வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை என அக்கட்சியின் பல தொகுதிகள், வெளிப்படையாகவே கூறியுள்ளன.
பாஸில் 1983-இலிருந்து தலைமைப் பதவிக்குப் போட்டி இருந்ததில்லை என்றும் அந்தப் பாரம்பரியம் தொடரலாம் என்றும் அண்மையில் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி கூறியதை அடுத்து இப்படியொரு கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
முஸ்தபாவின் கூற்று “அவரது தனிப்பட்ட கருத்து” என பெண்டாங் பாஸ் தொகுதித் தலைவர் முகம்மட் தவுலான் மாட் ரசுவால் கூறினார்.
“அவரது கூற்று பாஸ் தொகுதிகள் தாங்கள் தகுதியானவர்கள் என்று நினைப்போரைத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான வேட்பாளர்களாக தேர்ந்தெடுப்பதை எந்த விதத்திலும் தடுக்காது”, என்றவர் கூறியதாக சினார் ஹரியான் அறிவித்துள்ளது.