நெகிரி செம்பிலான், பாகாவில், கம்போங் கேட்கோ குடியிருப்பாளர்களுடன் சேர்ந்து அவர்களின் பால்மரத் தோட்டங்கள் அழிக்கப்படாமல் தடுக்க முனைந்த எதிரணி சட்டமன்ற உறுபினர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.
டிஏபி-இன் பாகாவ் சட்டமன்ற உறுப்பினர் சியு செ யோங், செனாவாங் சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன், பிகேஆரின் போர்ட் டிக்சன் சட்டமன்ற உறுப்பினர் எம்.ரவி ஆகியோரே அம்மூவருமாவர்.
தம் சகாக்கள் கைது செய்யப்பட்டதை டிஏபி இளைஞர் தலைவரும் ரசா எம்பி-யுமான தியோ கொக் சியோங் உறுதிப்படுத்தினார்.
கம்போங் கேட்கோவில் நிலத் தகராறு தொடர்பில் தங்கள் ரப்பர் தோட்டங்கள் அழிக்கப்படுவதைத் தடுப்பதற்காக 200-க்கு மேற்பட்ட கிராமவாசிகள் நேற்றிரவே திரண்டு விட்டார்கள்.
ஆனால் காலையில் 100-க்கு மேற்பட்ட போலீசாரும் ரேலா படையினரும் அக்கூட்டத்தைக் கலைத்ததாக ஒரு கிராமவாசி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“போலீஸ் சுமார் 30 பேரைக் கைது செய்தது”, என ராம் பாபு மலேசியாகினியிடம் கூறினார்.
பி.பி.அண்ணா துன் சம்பந்தனுடன் அந்த காலத்தில் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிய சொத்து.இப்படிசெய்த அவர்.மாநில அரசாங்கத்தில் பட்டா விவகாரத்தை சரியாக செய்யவில்லை.மக்களை திவளாக்கும் நிலையில் விட்டு சென்றுவிட்டார்.
பி பி அண்ணாவா? இவரை நம்பி கம்போங் கேட்கோ மக்கள் ஏமாந்ததுதான் மிச்சம் .. இவரெல்லாம் அண்ணா!
மக்கள் நலன் வீரன் பறைசாற்றும் மஇகா எங்கே உங்கள் பணி?
மா இ கா பதவி வெறி பிடித்து இவன்கள் அடிதுக்கொல்லவே நேரம் போதாது ???? மற்ற விசயங்களை எப்படி கவனிப்பான்கள்.
எல்லாவற்றுக்கும் போட்டியைத்தான் உருவாக்கினார்களே தவிர உருப்படியாக எதையும் செய்யவில்லை. உருவாக்கியர்வர்களின் பிள்ளைகள் சொகுசாக வாழ்கிறார்கள். வாங்கியவர்களின் பிள்ளைகள் பயந்து பயந்து வாழ்கிறார்கள். தமிழா! எப்போதுமே ஏமாற்றம் தான் உனக்கு?