எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் சிறையிடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க சனிக்கிழமை, கோலாலும்பூரில், நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் பேரணி சட்ட விரோதமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
“அதற்கு அனுமதி பெறப்படவில்லை. அது ஒரு சட்டவிரோத பேரணி”, என டாங் வாங்கி போலீஸ் தலைவர் சைனல் சமா கூறினார். அவர் பேரணி ஏற்பாட்டாளர்களைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
எது சட்டவிரோதம்.? ஜனநாயக நாட்டில் மக்கள் பேரணிகளை நடத்துவதை தடுப்பதே சட்ட விரோதமாகும்.
அய்யா சிங்கம் ஜனநாயக கதவை ஆட்சியாளர்கள் சென்றதேர்தலிலேய மூடிட்டரகளே 52க்கு தோல்வி 48க்கு வெற்றக்குஎன்னவெல்லாம் வியாக்கானம் செயதார்கள்!
நல்ல உலகமே காறி துப்பும் ஜனநாயகமாட இது !!!
சபாஷ் …ஏற்பாட்டாளரை கைது செய்யுங்கள்…இந்த பேரணி எல்லாம் உள்ளே இருக்கும் மாமாவுக்காக..மக்களுக்காக ஒன்றும் அல்ல..
அப்பாவி மக்களை ‘போட்டுத் தள்ளுவதும்’, சாமான்ய மக்களிடம் நீங்க லஞ்சம் வாங்குவதும் சட்ட விரோதம் தான். ஆனால் காலம் காலமாக இதெல்லாம் நடந்து கொண்டுதானே இருக்கிறது.
அதற்கு நீங்கள் அனுமதி கொடுக்கவில்லை. அதுவும் சட்ட விரோதம் தானே!
எதுதாண்டா உங்களுக்கு சட்டவிரோதம்… எது எடுத்தாலும் சட்டவிரோதம்..
ஜனநாயக நாட்டிலே மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்க கூடினால், பொது மக்களுக்கும் பேரணிக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பை பலபடுத்த வேண்டிய காவல்துறை “சட்டவிரோதமானது” என்று கூறி நழுவி கொள்ள பார்க்கும் அதிசயம் உலகிலேயே மலேசியாவில் மட்டுமே காணலாம்.
“MALAYSIA BOLEH”