வியாழக்கிழமை தாக்கப்பட்டிருந்தாலும் பாஸ் மத்திய செயல்குழு உறுப்பினர் சுல்கிப்ளி அஹ்மட், துணிச்சலாக கருத்துச் சொல்லும் போக்கை மாற்றிக்கொள்ளப் போவதில்லை.
“மனத்தில் அச்சத்தை உண்டுபண்ணுவதுதான் தாக்குதலின் நோக்கம். ஆனால், நான் தொடக்கத்திலிருந்தே அச்சம் கொள்வதற்கு எதிராக போராடி வந்திருக்கிறேன்.
“அது என் பணியைத் தடுக்காது”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அத்தாக்குதலுக்கும் எதிர்வரும் கட்சித் தேர்தலுக்கும் தொடர்பிருக்குமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்தார்.
“நான் எதையும் ஊகிக்க விரும்பவில்லை. போலீஸ் விசாரிக்கட்டும்”, என்றார்.
பாஸ் கட்சித் தேர்தல் ஜூன் மாதம் நடைபெறும்.

























