இன்று 13வது நாடாளுமன்றக் கூட்டத்தைத் தொடக்கி வைத்த பேரரசர் துவாங்கு அப்துல் ஹாலிம் முவாட்ஸாம் ஷா. மலேசியர்கள் சட்டமியற்றும் துறை, நிர்வாகம், நீதித்துறை ஆகிய மூன்றின் அதிகாரப் பகிர்வின்மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மலேசியாவில் “நடப்புச் சட்டங்களுக்கு ஏற்ப” அதிகாரப் பகிர்வு நன்கு வேரூன்றி இருப்பதாக அவர் சொன்னார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கி 20 நாள்கள் நடைபெறும்.