முறையாக உடை அணியும் விதியை முஸ்லிம்- அல்லாதாரிடையேயும் அமல்படுத்த வேண்டும்

riduanதிரெங்கானு  அரசு  மோட்டார்  சைக்கிளில்  பின்புறம்  அமர்ந்து  செல்லுதல்,  வெள்ளிக்கிழமை  தொழுகையைத்  தவிர்த்தல், பொது  இடங்களில்  கவர்ச்சிக்  காட்டி உடை  அணிதல்  போன்ற விவகாரங்களில்  இஸ்லாமிய  ஒழுங்கு விதிகளை  நடைமுறைப்படுத்துவதில்  கடுமையாக  நடந்து  கொள்வதை  ரித்வான்  டீ  அப்துல்லா  வரவேற்றுள்ளார்.

அதைத்  தாலிபானிசம்  என்று  குறைகூறுவோரைச்  சாடிய  அவர்,  “மனிதனை  மனிதனாக  வைத்திருக்க”  அது  அவசியம்  என்றார்.

“இந்த  விதிகளை  முஸ்லிம்-அல்லாதாருக்கும்  விரிவுபடுத்த வேண்டும்  என்பேன். அதுதான்  நியாயமாக  இருக்கும்”, என்றும்  அவர்  குறிப்பிட்டார்.

“பாலியல்  கவர்ச்சியூட்டும்  வகையிலோ  முறையற்ற  வகையிலோ உடை  அணிய  எந்தக்  காரணமுமில்லை. எந்தச்  சமயமும்  அதை  அனுமதிப்பதில்லை”, என்றாரவர்.