1மலேசியா மேம்பாடு பெர்ஹாட் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் பற்றி விசாரணை நடத்துவதற்காக ஒரு சிறப்பு பணிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் காலிட் அபு பாக்கார் தெரிவித்துள்ளார்.
அப்பணிப்படையில் போலீசார், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் சட்டத்துறை தலைவர் அலுவலகம் இடம் பெற்றிருக்கும் என்று அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறினார்.
பிரதமர் நஜிப் விசாரிக்கப்படுவாரா என்று கேட்டதற்கு, “ஆம், அவரும் விசாரிக்கப்படுவார் என்றாரவர்.
தானை தலைவர் சாமிவேலுவை 300 கோடி ம.இ. கா சொத்து விவகாரத்தில் விசாரிக்க வழி ஏதும் இல்லையா ?
நடதிட்டாலும், உண்மை எல்லாம் வெளியவிடும் ஐயா. நம்பிவிடுங்கள், இல்லையேல் வேட்டையாடப்படுவீர்கள்.
என்னை நோண்டினால் நான் இதில் சம்பந்தப்பட்ட பலரை நோண்டி நொங்கு எடுத்து விடுவேன் என்று முன்பு ஒரு முறை தானைத் தலைவர் கூறியது தங்கள் ஞாபகத்துக்கு வரவில்லையோ!
சிறப்புப் பணிப்படையில் எதிர்கட்சியினரும் பங்கு பெற்றால் தான் அதில் நம்பகத்தன்மை இருக்கும். இல்லாவிட்டால் அம்னோ தலைவர்கள் நஜிப்பைச் சந்தித்தக் கதை தான்!
“1MDB” மட்டுமில்லாமல் “BR1M” என்பது உண்மையிலே அரசாங்கம் மக்களுக்கு வழங்கும் உதவி பணமா ? அல்லது அரசாங்கம் மக்களுக்கு வழங்கும் லஞ்சமா ? என்பதை இந்த சிறப்பு பணிப்படை விசாரணை செய்ய வேண்டும்.