மகாதிர்: சிவப்புச் சட்டைக்காரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்

 

umnosupportsநேற்று அம்னோ தொகுதித் தலைவர்கள் அனைவரும் பிரதமர் நஜிப்புடன் நடத்திய தோழமைக் கூட்டத்தில் சிவப்புச் சட்டை அணிந்திருந்தனர். ஆகவே, கட்சியில் எல்லாம் நல்லதாகவே இருக்கும் என்று கூறப்பட்டது.

நேற்று நஜிப்புக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக கூடியிருந்த அம்னோ தொகுதித் தலைவர்கள் பற்றி கேட்ட போது டாக்டர் மகாதிர் இப்படி ஒரு கருத்தை கூறினார்.

“அவர்களின் சட்டை எல்லாம் சிவப்பாக இருந்தது. ஆக, அவர்கள் சிவப்பு அணிந்திருக்கிறார்கள் என்றால், அவர்கள் எல்லாம் ஒன்றிணைந்திருக்கிறார்கள் என்றாகும்”, என்று மகாதிர் கூறியதாக த மலாய் மெயில் ஒன்லைன் செய்தி கூறுகிறது.

நஜிப்பின் 1மலேசியா மேம்பாடு பெர்ஹாட் குறித்து கடும் விமர்சனம் தெரிவித்துள்ள மகாதிர், தாம் தலைவராக இருந்த 22 ஆண்டுகாலத்தில் இம்மாதிரியான வர்ண ஒருங்கிணைப்பிலான ஆதரவை பெற்றதில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.

“எனது காலத்தில் ஒருமைப்பாடு ஏதும் இல்லை. தெங்கு ரசாலி என்னுடன் போராடினார், மூசா என்னுடன் போராடினார், அன்வார் என்னுடன்umnounitymeet போராடினார் – ஒருமைப்பாடு என்பதெல்லாம் கிடையாது”, என்று அவர் கூறியதாக அச்செய்தி கூறுகிறது.

நஜிப் மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று 160 அம்னோ தொகுதித் தலைவர்கள் நஜிப்புடன் சந்திப்பு நடத்தி தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.

ஆனால், நேற்று நடைபெற்ற அச்சந்திப்பில் துணைப் பிரதமர் முகைதியாசின் மற்ரும் மகாதிரின் மகன் முக்ரிஸ், கெடா மந்திரி புசார், ஆகிய இருவரும் அச்சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு வேறு வேலை இருந்ததாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.