கிளந்தான், செம்பாக்கா இடைத் தேர்தல் ஐந்து-முனைப் போட்டியாக அமையும். பாஸின் கோட்டையான அத்தொகுதியில் பாஸுக்கு எதிராக 4 சுயேட்சை வேட்பாளர்கள் களமிறங்குகிறார்கள்.
பாஸ் கட்சி பாவுங் பள்ளிவாசல் இமாம் அஹ்மட் பாத்தான் முஹ்மூட்டை அதன் வேட்பாளராக நியமித்துள்ளது. அவரை எதிர்த்து கிளந்தான் பெர்காசா உதவித் தலைவர் ஷரிப் மஹ்மூட், அம்னோ உறுப்பினர் பாட்சில்லா உசேன், தொழில் அதிபரான அஸ்லா மாமாட், இஸாட் புஹாரி இஸ்மாயில் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பிஎன் போட்டியிடவில்லை. அது, கிளந்தான் வெள்ள நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்தப்போவதாகக் கூறியது.
பாஸ் ஆன்மிகத் தலைவர் நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி காலமானதை அடுத்து செம்பாக்கா தொகுதி காலியானது
குறித்துக் கொள்ளுங்கள். பாஸ் கட்சிக்கு 12,500. பெர்காசாவிற்கு 2,500. அம்னோ உறுப்பினருக்கு 1,500. ஒரு சுயேட்சைக்கு 500. மற்றொரு சுயேட்சைக்கு 250 வாக்குகள்.
நிக் அஜிஸ் கோட்டை இதை யாராலும் அசைக்க முடியாது.