எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் சிறையிடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க 15-க்கு மேற்பட்டோர் இன்று நாடாளுமன்றத்துக்கு முன் மொட்டை அடித்துக் கொண்டனர்.
அவர்களில் கோட்டா கினாபாலு எம்பி ஜிம்மி வோங், பாசிர் பூத்தே எம்பி நிக் மைஸான் நிக் முகம்மட் ஆகியோரும் உள்ளிட்டிருந்தனர்.
நிக் மைஸான், “குறைபாடுடைய” நீதிமுறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே மொட்டை போட்டுக் கொண்டதாகக் கூறினார்.
“அரசாங்கம் நீதி காக்கத் தவறிவிட்டது. அன்வாருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு தவறு. அது அரசியல் நோக்கம் கொண்டது”, என அந்த பாஸ் எம்பி கூறினார்.
ஜிம்மி, நாடு மேன்மையுற தம் தலைமுடியைத் தியாகம் செய்வதாகக் கூறினார்.
“இந்தப் பாதி அன்வாருக்கு மறுபாதி சாபாவுக்கு……சாபாவைச் சட்டவிரோத குடியேற்றக்காரர்களிடமிருந்து காப்பாற்றுங்கள்”, என்றவர் முழக்கமிட்டார்.
நாடு திவாலாகிக் கொண்டு போகிறது. சாப்பாட்டிற்கு என்ன செய்வது என கவலையோடு உட்கார்ந்திடுந்த எனக்கு உற்சாகமான செய்தி இது. ஆம்! தற்போதைய சூழலில் ‘மொட்டையடிக்கும்’ தொழில் செய்தால் நல்ல வருமானம்.