சனிக்கிழமை நடைபெற்ற கித்தா லவான் பேரணி தொடர்பில் பிகேஆர் மத்திய செயல்குழு உறுப்பினர் ஃபாரிஸ் மூசா இன்று கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டதை ஃபாரிஸ் டிவிட்டரில் உறுதிப்படுத்தினார். அமைதிப் பேரணிச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் பகுதி 143-இன்கீழ் தாம் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர் டிவிட் செய்திருந்தார்.
ஃபாரிஸ், கித்தா லவான் பேரணி தொடர்பில் கைதான மூன்றாவது பிகேஆர் தலைவராவார்.
ஏற்கனவே, சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினரும் பிகேஆர் இளைஞர் தலைவருமான நிக் நஸ்மி நிக் அஹ்மட்டும் இன்னொரு பிகேஆர் இளைஞர் தலைவரான சைபுல்லா சுல்கிப்ளியும் பேரணிக்கு ஏற்பாடு செய்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அட குருட்டு போலீசாரே!பேரணியில் கலந்துகொண்ட அனைவரையும் அல்லவா கைது செய்ய வேண்டும். வெறும் மூவருக்கு மட்டும்தான் ‘உள்ளே’ இலவச சாப்பாடா? அதில் பங்குகொண்ட எங்களுக்கெல்லாம் கிடையாதா? இது எந்த விதத்தில் நியாயமாகும்?
POLIS MALAYSIA UMNO NAJIB ROSMAH………………