புத்ரா ஜெயா: நீர் உடன்பாடு முறிந்ததற்கு சிலாங்கூரே காரணம்

maximusசிலாங்கூர் மாநில  அரசுதான்  நீர்  உடன்பாட்டை  “முறித்துக்கொண்டது” எனக்  கூட்டரசு  அரசாங்கம்  கூறுகிறது.

இன்று  நாடாளூமன்றத்தில்  இதனைத்  தெரிவித்த  எரிபொருள், பசுமைத்  தொழில்நுட்பம், நீர்வள  அமைச்சர்  மெக்சிமஸ்  ஒங்கிலி,  செப்டம்பரில்  இரு  தரப்பினரும்  செய்துகொண்ட  உடன்பாட்டின்  நிபந்தனைகளை  மாநில  அரசுதான்  நிறைவேற்றவில்லை  என்றார்.

“எங்களைப்  பொறுத்தவரை,  உடன்பாட்டை  நீட்டிப்பதில்லை  என்று  மாநில அரசு  முடிவு  செய்யும்வரை  எல்லாமே  ஒழுங்காகத்தான்  சென்று  கொண்டிருந்தது”, என்றாரவர்.

மாநில  அரசின்  முடிவால்  அண்மைய  எதிர்காலத்தில்  சிலாங்கூர்,  புத்ரா  ஜெயா, கோலாலும்பூர்  ஆகியவை நீர்  தட்டுப்பாட்டை  எதிர்நோக்கலாம்  என்று  அமைச்சர்  எச்சரித்தார்.