எதிவரும் கட்சித் தேர்தலில் பாஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு துவான் இப்ராகிம் துவான் மான் நியமனம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், அவர் அந்த நியமனத்தை நிராகரித்து விட்டார்.
பாஸ் கட்சியின் உதவித் தலைவரான அவர், தமது நியமனத்தை “அதிர்ச்சி” அளிப்பதாகும் என்று வர்ணித்தார். தற்போதைய தலைவர் அப்துல் ஹாடி அவாங்கை தாம் தொடர்ந்து ஆதரிப்பதாக அவர் கூறினார்.
கோத்தா பாரு பாஸ் தொகுதிக் குழுவின் 13 உறுப்பினர்களில் 11 உறுப்பினர்கள் துவான் இப்ராகிம்மை தலைவர் பதவிக்கு நியமித்தனர்.
எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கும் பாஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் தலைவர் தேர்தல் நடத்தப்படும்.
இவரின் அறிக்கையை படித்ததும் ஹடி அவங் நிம்மதியாக துங்கிஇருப்பார்.