1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி) கேய்மன் தீவில் செய்த முதலீட்டில் மிச்சமிருந்த யுஎஸ்$1.103 பில்லியன் இப்போது சிங்கப்பூர் வங்கி ஒன்றில் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்தது.
4 பில்லியன் ரிங்கிட்டுக்குச் சமமான அத்தொகை இப்போது பிஎஸ்ஐ பேங்க் லிமிடெட் சிங்கப்பூரில் வைக்கப்பட்டிருப்பதாக நிதி அமைச்சு டோனி புவா(டிஏபி- பெட்டாலிங் உத்தாரா)வின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தது.
ஏன் சிங்கப்பூரில்?? மலேசியாவில் நம்பிக்கையான வங்கி இல்லையா??? அல்லது தேசிய வங்கியின் கொள்கை 1MDBக்கு சாதகமாக இருக்காதா??? ரிங்கிட்டின் மோசமான வீழ்ச்சிக்கு அரசாங்கமோ அல்லது நிதி அமைச்சோ என்ன பதில் வைத்துள்ளது???
தயவு செய்து 4 பில்லியன் என்று எழுத வேண்டாம். 4000 கோடி என்று எழுதினால் மக்களுக்கு எளிதில் புரியும்…
நாட்டை திவால் பண்ண ஒரு நல்ல காரியம் .வாழ்க அம்னோ
உள்ளுர் வங்கிகள் என்றால் அரசியல்வாதிகளே மொட்டை அடித்து விடுவார்கள்!