எதைப் பற்றிக் கேட்டாலும் தயங்காது பதிலளிக்கக் கூடியவர் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். ஆனால், அவர் இன்று தாம் கலந்துகொள்ளும் நிகழ்வு பற்றி மட்டுமே கேள்விகள் கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தியது ஆச்சரியமாக இருந்தது.
செர்டாங் பெர்டானா பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மகாதிர், 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி) பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்தார்.
“1எம்டிபி-க்கும் பல்கலைக்கழகத்துக்கும் தொடர்பில்லை. அவர்களிடம் நாங்கள் பணம் எதுவும் கடன் வாங்கியதில்லையே. பொருத்தமில்லாத கேள்வி, பதிலளிக்க இயலாது”, என்றார்.
ஆனாலும் செய்தியாளர்கள் விடவில்லை. 1எம்டிபி கணக்குகளைத் தணிக்கை செய்யுமாறு தலைமைக் கணக்காய்வாளர் பணிக்கப்பட்டிருப்பதால் இனியும் அவர் அதனைக் குறை சொல்வாரா என்று மகாதிரிடம் வினவினார்கள்.
“அதற்கு இன்னொரு நேரத்தில் பதிலளிப்பேன். இப்போது நம் கவனம் செல்ல வேண்டியது சுகாதாரக் கல்விமீது”, என்று கூறினார்.
செய்தியாளர் கூட்டம் தொடங்கியபோது பெர்டானா பல்கலைக்கழகத்தின் தலைவர் மோகன் சுவாமி, பல்கலைக்கழகத்தைப் பற்றி மட்டுமே கேள்கிகள் கேட்க வேண்டுமெனச் செய்தியாளர்களைக் கேட்டுக் கொண்டார். அதற்கு மகாதிரும். “ஆம். அதுதான் சரி”. என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
(1MDB) பற்றிய கேள்விக்கு பதிலளித்தால் நஜிப்புக்கு தலைவலி
என்று அர்த்தம் !மூடிமறைக்க தொகுதி தலைவர்களை அழைத்துகூட்டம் நடத்தினாரே !
ஆம்! அது தான் சரி! என்று நாங்களும் சொல்லுகிறோம்! என்ன கெட்டுப் போய்விட்டது!