அன்வார் இப்ராகிமின் குதப்புணர்ச்சி வழக்கு II-மீதான ஷாபி அப்துல்லாவின் முதலாவது விளக்கக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததை ஒப்புக்கொண்ட அரசாங்கம், அதன்பின்னர் நடந்த விளக்கக் கூட்டங்களுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று கூறிற்று.
அரசாங்கம் “முதலாவது கூட்டத்தை மட்டுமே ஏற்பாடு செய்தது” என நன்சி ஷுக்ரி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“மற்ற கூட்டங்களை என்ஜிஓ-கள் ஏற்பாடு செய்தன”, என்றார்.
விளக்கக் கூட்டங்களின்போது யாரும் ஷாபியுடன் விவாதம் செய்யலாம் என அழைப்பு விடுக்கப்பட்டது என்றும், ஆனால் “எவரும் துணியவில்லை”, எனவும் நன்சி கூறினார்.