பாஸ் செப்பாங் எம்பி முகம்மட் ஹனிபா மைடின், அன்வார் இப்ராகிமின் குதப்புணர்ச்சி வழக்குமீது வாதமிட வருமாறு அரசாங்கம் நியமித்த அரசுத்தரப்பு வழக்குரைஞரான ஷாபி அப்துல்லாவுக்கு மீண்டும் சவால் விடுத்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் அவர் இச்சவாலை விடுத்தார்.
“ஆம். அதன்மீது வாதமிட நான் தயார். ஷாபியுடன் அல்லது வேறு யாருடனும், அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடினாக இருந்தாலும் சரிதான் நான் வாதத்துக்குத் தயார்.
“நானும் பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரம்லியும், ஷாபியும் கைரியும் என்றாலும் சரிதான். ஆர்டிம் உள்பட எங்கு வேண்டுமானாலும் வாதமிடலாம்”, என்று ஹனிபா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
நல்ல சவால். மக்களுக்கும் உண்மை நிலவரத்தினை ஊகிக்க சிறந்த தளம்..
வரமாட்டணுங்க, ஏன் ஏன்றால் அவரும் லாயர்.
பாவம் ஷாபி! ஏதோ 1000 வெள்ளி தான் சம்பளமாகக் கொடுத்தார்களாம்! அவரை விட ‘சீப்’ பாக யாரும் கிடைக்கவில்லை! அவரைப் போய் ஏம்பா வம்புக்கு இழுக்கிறீங்க!