15 ஆண்டுகள் பாஸ் தலைவராக உள்ள அப்துல் ஹாடியை எதிர்த்துப் போட்டியிடுவது எளிதானதல்ல என்கிறார் பாஸ் இளைஞர் தலைவர் சுஹாய்ஸான் காயாட்.
எதிர்வரும் கட்சித் தேர்தலில், தலைவர் பதவிக்கு அவரை எதிர்த்துப் போட்டியிருக்குமா என்று வினவப்பட்டதற்கு அவர் இவ்வாறு கூறினார்.
“அவரை எதிர்ப்பது கடினம். அவருக்கு இணையான தலைவர் எவரும் கட்சியில் இல்லை”, என சுஹாய்ஸான் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அப்துல் ஹாடி கட்சியில் அவருக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்திக் கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என சுஹாய்ஸான் கூறினார்.
தலைவரின் முடிவெடுக்கும் முறைகளால் கட்சிக்குள் அதிருப்தி நிலவினாலும் கட்சி உறுப்பினர்கள் ஹாடியின் முடிவுகளின்படியே நடந்து கொள்வதாகவும் அவர் சொன்னார்.
“ஹாடியை, பாஸ் உறுப்பினர்களை ஒன்றுபடுத்தும் சின்னமாகப் பார்க்கிறோம். அவர் எங்களுக்குத் தந்தைபோல் விளங்குகிறார்”, என்றார்.