‘அவசரப்பட்டு விசாரணை செய்ய உத்தரவிட்டிருக்கிறார்’, ஐஜிபிமீது குற்றச்சாட்டு

igp ramaமலாய்க்காரர்களைக்  கண்டு  அச்சமில்லை  என்று  முகநூலில்  பதிவிட்ட  பினாங்கு  துணை  முதலமைச்சர்  பி.இராமசாமி மீது  விசாரணை  நடத்துமாறு  பினாங்கு  போலீசுக்கு  உத்தரவிட்டதில் போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்   அவசரப்பட்டு  நடந்து  கொண்டிருப்பதாகக்  குற்றம்  சாட்டப்பட்டிருக்கிறார்.

காலிட்  சுட்டிக்காட்டும்  அந்த  முகநூல்  பதிவு  பிஎன் கணினிப்படையினரின்  “கைவேலை”  என்று  இராமசாமி   கூறினார். அந்த  முகநூல் பதிவு  துணிச்சலிருந்தால்  மே 13-ஐக்  கொண்டு  வாருங்கள் என  மலாய்க்காரர்களுக்குச்  சவால்   விடுகிறது.

“அது  என்  பெயரைக் கெடுக்கும் நோக்கம்  கொண்ட  ஒரு  பொய். அதைச் செய்தவர்கள்  என்  பெயரைக்கூட  தப்பாக  எழுதியிருக்கிறார்கள். ஐஜிபி  அதைக்  கவனிக்கவில்லையா? இது  பிஎன்  கணினிப்படையினரின்  வேலை”, என்றவர்  கூறினார்.

“அதை  நான்தான்   பதிவிட்டேனா  என்பதை  ஆராய்ந்துவிட்டு  அதன்பின்னர்  என்னை  விசாரிக்க  பினாங்கு  போலீஸ்  தலைவரை (அப்துல் ரகிம் ஹனாபி)  பணித்திருக்க  வேண்டும்”, என  இராமசாமி  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

அப்பதிவில் “R. Ramasami”  எனக்  கையொப்பமிடப்பட்டிருந்தது.