வழக்குரைஞர் மன்றத் தீர்மானத்தைத் தடுக்கப் பார்க்கிறார் ஷாபி

motionமூத்த  வழக்குரைஞரான  ஷாபி  அப்துல்லா,  நாளைய  மலேசிய  வழக்குரைஞர்  மன்ற  ஆண்டுக்  கூட்டத்தில்  தம்  நடத்தைப்  பற்றி  விவாதிக்கக்  கோரும்  தீர்மானத்தைத்  தடைசெய்ய  வேண்டுமென   நீதிமன்றத்தில்  மனுச் செய்திருக்கிறார்.

வழக்குரைஞர்  மன்றத்தில்  அத்தீர்மானத்தைக்  கொண்டுவந்த முன்னாள்  முறையீட்டு  நீதிமன்ற  நீதிபதி  வி.சி. ஜார்ஜ்,  வழக்குரைஞர்  டோமி  தாமஸ்  ஆகியோரை    எதிர்வாதிகளாக  ஷாபி  தம்  மனுவில்  குறிப்பிட்டுள்ளார்.

வழக்குரைஞர்  மன்றத்  தலைவர்  கிறிஸ்டபர்  லியோங்கையும்  ஒர்  எதிர்வாதியாக  அவர்  சேர்த்துக்  கொண்டிருக்கிறார்.

தாமஸும்  ஜார்ஜும்  வழக்குரைஞர்  மன்றத்தில்  கொண்டுவந்துள்ள  தீர்மானம்,  அன்வார்  இப்ராகிமின்  குதப்புணர்ச்சி  வழக்கு  தொடர்பில்  ஷாபி  பல  விளக்கக்  கூட்டங்களை  நடத்தியதற்காக  அவர்  வழக்குரைஞர்  மன்ற  ஒழுங்கு  வாரியத்தின்முன்  நிறுத்தப்பட  வேண்டும்  எனக்  கோருகிறது.