மகாதிர்: பிரதமரின் மாற்றான் பிள்ளை ஆடம்பர கொண்டோக்கள் வாங்கியது எப்படி?

wealthபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக், அவரின்  குடும்பச்  சொத்து  பற்றி  விளக்கமளிக்க  வேண்டும்  என்று  கோரும்  கூட்டத்தில்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டும்  இப்போது  சேர்ந்து  கொண்டிருக்கிறார்.

இன்று  மகாதிர்  அவரது  வலைப்பதிவில்  நஜிப்பின்  மாற்றான்  பிள்ளையான  ரிஸா  அசிஸ்  பற்றிக் கேள்வி  எழுப்பி  இருக்கிறார். அசிஸ், அமெரிக்காவில்  ஆடம்பர  அடுக்குமாடி  வீடுகளை  வாங்குகிறார், ஹாலிவூட்டில்  படங்கள்  தயாரிக்கிறார். இதெல்லாம்  அவரால்  எப்படி முடிகிறது  என  மகாதிர்  வினவினார்.