தம்மீதான தீர்மானத்துக்கு எதிராக தடையுத்தரவைப் பெற்றார் ஷாபி

motionமூத்த  வழக்குரைஞர்   ஷாபி  அப்துல்லா,  நாளைய  மலேசிய  வழக்குரைஞர்  மன்ற  ஆண்டுக்  கூட்டத்தில்  தம்மீது  தீர்மானம்  கொண்டுவரப்பட்டு  விவாதிக்கப்படுவதைத்  தடைசெய்யும்   நீதிமன்ற  உத்தரவைப்  பெற்றிருக்கிறார்.

நீதிபதி  அஸ்மாபி, ஷாபியின்  மனுவை  ஏற்று  அவர்  கோரிய  நீதிமன்ற  தடையுத்தரவைப்  பிறப்பித்தார்.

அம்மனு  மீதான  விசாரணை  மார்ச் 27-இல் நடைபெறும்.

மலேசிய  வழக்குரைஞர்  மன்றத்  தலைவர்  கிறிஸ்டபர்  லியோங்-கைத் தொடர்புகொண்டு  பேசியதற்கு  இவ்விவகாரம்  பற்றி  எதுவும்  தெரியாது  என்றார்.