1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் அதன் கடன்களைத் தீர்ப்பதற்கு ஆனந்தகிருஷ்ணனிடம் பணம் கடன் வாங்கவில்லை என நிதி அமைச்சு கூறியது.
அது கடன் வாங்கியதாகக் கூறப்படுவது பற்றி தியான் சுவா கேட்டிருந்த கேள்விக்கு நிதி அமைச்சு எழுத்துப்பூர்வமாக இந்தப் பதிலை அளித்தது.
“1எம்டிபி கோடீஸ்வரர் ஆனந்தகிருஷ்ணனிடம் கடன் வாங்கியதாகக் கூறப்படுவது உண்மையல்ல”, என நிதி அமைச்சு கூறிற்று.
1எம்டிபி கேய்மன் தீவில் போட்டு வைத்திருந்த யுஎஸ்$2.318 பில்லியனை மீட்டுக் கொண்டிருப்பதாகவும் அதைக் கொண்டு அது தன் கடனைத் திருப்பிச் செலுத்தியதாகவும் அமைச்சு தெரிவித்தது.
வடிவேலு ஒரு படத்துல இந்த கட்டபுள்ளைக்கு நம்ம ஆளுங்கள அடிக்கிறதே வேலையாபோச்சி அப்படின்னு சொல்லுவாரு அதுமாதிரி இவனுங்களுக்கு பொய் சொல்றதே ஒரு வேலையாபோச்சி…
அதாவது நம்ப BN அரசியல்வாதிகளுக்கு…
ஆனந்தகிருஷ்ணன் அரசாங்கத்தை நம்பவில்லையோ என்னவோ!
ஒரு பொய்யை மறைக்க இன்னும் ஒரு பொய்
கேய்மன் தீவு பணம் சிங்கப்பூர் வங்கியில் இருப்பதாக சொன்னீர்கள். சிங்கப்பூர் வங்கியில் பணம் இருக்கிறது என்று கூறித்தான் (சிங்கப்பூர் வங்கியில் இருக்கும் பணத்தை மீட்காமல்) கடனை
அடைத்தீர்கள்போலும், அதாவது POST DATED காசோலைக்கு கடன் கொடுத்து கம்பள வியாபாரி கம்பி நீட்டியதைபோல்.
அட கவ்வோதிகளா !!!
1எம்டிபி ஆனந்தாவிடம் கடன் வாங்கவில்லை ,அது வந்து நம்ம நடிகர் நாகேஷ் மகன் ஆனந்திடம் வாங்கினார்களாம் !! எப்படி