கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கித்தா லவான் பேரணிக்கு எதிராக போலீஸ் மேற்கொண்டுள்ள நடவடிக்கையில் டிஏபி இளைஞர் தலைவர் தியோ கொக் செங் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
சிறை வைக்கப்பட்டுள்ள எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவு தெரிவிக்கும் அப்பேரணி தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்ய தியோ டாங் வாங்கி போலீஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அங்கு சென்ற தியோ தடுத்து வைக்கப்பட்டதாக டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.
“போலீஸ் நடவடிக்கை தொடர்கிறது- கித்தா லவான் பேரணி தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறாவது ஆள் டிஏபி இளைஞர் தலைவர் தியோ கொக் சியோங்”, என்றவர் டிவிட் செய்திருந்தார்.
வாக்குமூலம் பதிவுசெய்ய தியோவை அழைத்ததை போலீசும் உறுதிப்படுத்தியது. ஆனால், அவர் தடுத்து வைக்கப்படுவாரா என்பது “விசாரணையைப் பொறுத்தது” என்று அது கூறிற்று.
இந்த துருப்பிடித்த போலீஸ் தலைவரும் அவரது பெரும்பாலான உதவாக்கரை கையாட்களும், அந்த பேரணியில் கலந்துகொண்ட எங்கள் அனைவரையும் அல்லவா கைது செய்ய வேண்டும்! கோழைகள்! கோழைகள்!!