சுங்கை பூலோவில் சிறை வைக்கப்பட்டுள்ள எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாம்.
அன்வாரின் இரத்த அழுத்தம் 87/50 ஆக உள்ளது என அவரின் இரண்டாவது மகளான நுருல் நுஹா அன்வார் கூறினார்.
ஒரு மாதத்தில் தம் தந்தை 3கிலோ கிராம் எடை குறைந்திருப்பதாக அவர் சொன்னார்.
“அவரது உடல்நிலை குறித்து நாங்கள் மிகவும் கவலை கொண்டிருக்கிறோம்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“அவருக்கு சத்துணவுகள், வைட்டமின்கள் போன்றவை கிடைப்பதில்லை”, என்றாரவர். அன்வார் “சூடான, புழுக்கம் மிகுந்த” இடத்தில் வைக்கப்பட்டிருப்பதாக அவர் வருத்தப்பட்டார்.
இவ்விவகாரங்களை அவரின் குடும்பத்தார் சிறையின் மருத்துவ வாரியத் தலைவரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர் அணி தலைவருக்கு போதுமான இடம் வசதி,மருத்துவர் வசதி என்று சிறை துறை கவனம் செலுத்த வேண்டும்.
எதிர் அணி தலைவருக்கு போதுமான இடம் வசதி,மருத்துவர் வசதி என்று சிறை துறை கவனம் செலுத்த வேண்டும்.
உமக்கு கடவுளின் துணை உண்டு, மக்களின் துணை உண்டு.. துணிந்து நில் தொடர்து செல்….வெற்றி நிச்சயம்…..
நஜிப் அன்வார் அழிவான் என்று எதிர்பர்கிறான் ஆனால் அழியபோவது ந… ரோச்…….தான்
(அடுத்த தேர்தலில்) ஆட்சி பறிபோவது அல்லது (விரைவில்) பதவி பறிபோவது ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில் ________சிப்பு அவர்கள் அன்வாரை விடுதலை செய்ய மன்னருக்கு சிபாரிசு செய்வதுதான் _____ சிப்புக்கு ஒரேவழி. அப்படி செய்தால் நாட்டு மக்களால் என்றென்றும் போற்றப்படுவார். இல்லாவிட்டால் நமது முன்னாள் தூங்குமூஞ்சி பிரதமர் கதிதான்
சட்டம் அனைவருக்கும் சமம் என்பது சிறையில் மண்டும்தான் .