1எம்டிபி-இல் முறைகேடுகள் இருந்தால் கண்டுபிடிக்கப்படுவது உறுதி: ஷாரிர் திட்டவட்டம்

sharir1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனத்தின்  கணக்கறிக்கைகள்  ஆய்வுகள்  செய்யப்படுவதால்  அந்நிறுவனத்தின் திட்டங்களில்  வெளிப்படைத்தன்மை இல்லை  என்ற  சந்தேகம்  யாருக்கும்  வர  வேண்டியதில்லை.

அங்கு  முறைகேடுகள்  நிகழ்ந்திருந்தால்   தேசிய  கணக்காய்வுத் துறையும்(என்ஏடி) பொதுக் கணக்குக்  குழுவும்(பிஏசி)  கவனிக்காமல்  இருக்காது  என பாரிசான்  நேசனல் ஆதரவாளர்  மன்றத்(பிஎன்பிபிசி)  தலைவர்  அப்துல்  ஷாரிர்  சமட்  கூறினார்.

“அதிகாரிகள்  மேற்கொள்ளும்  கணக்குத்  தணிக்கையிலிருந்து  1எம்டிபி-ஆல்  எதையும்  மூடி  மறைக்க  முடியாது.

“அந்நிறுவனத்தின்  நடவடிக்கைகளில்  சிறிதளவு  சந்தேகம்  கொண்டாலும்  அதன்  அதிகாரிகளில்  எவரையும்  விசாரிக்கும்  அதிகாரம்  என்ஏடி-க்கும்  பிஏசி-க்கும்  உண்டு”, பிஎன்பிபிசி  இணையத்  தளத்தில்  ஷாரிர்  கூறியிருந்தார்.