நேற்றிரவு போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட லெம்பா பந்தாய் எம்பி நூருல் இஸ்ஸா அன்வார், போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ஆனாலும், ஏப்ரல் 16-இல், அவர் மறுபடியும் போலீஸ் நிலையத்தில் முன்னிலை ஆக வேண்டும்.
விடுவிக்கப்பட்ட பின்னர் நூருல் செய்தியாளர்களிடம் பேசினார்.
“நான் கைது செய்யப்பட்டது ஐஜிபி, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஆகியோரின் அப்பட்டமான அதிகாரமீறல் என்பது தெளிவு.
“நாடாளுமன்றத்துக்கு எதிராக அத்துமீறல் நடந்திருப்பதற்குப் பிரதமரே பொறுப்பு”, என்றாரவர்.

























