ஹுடுட் சட்டவரைவைச் சட்ட ரீதியாக எதிர்க்க முனைந்துள்ளது கெராக்கான்

gerakanகிளந்தான்  சட்டமன்றத்தில் கிளந்தான்  ஷியாரியா  குற்றவியல்  சட்டத்  திருத்த  சட்டவரைவு  தாக்கல்  செய்யப்படும்  வேளையில்  கெராக்கான்  கட்சி  அதைச்  சட்ட  ரீதியாக  எதிர்க்க முனைந்திருக்கிறது.

அச்சட்டவரைவை  அரசமைப்புக்கு  விரோதமானது  என  அறிவிக்குமாறு கோரும்  மனு  ஒன்றை  அக்கட்சியின்  வழக்குரைஞர்  குழு  கோட்டா  பாரு உயர்  நீதிமன்றத்தில்  பதிவு  செய்திருப்பதாக  அதன்  இளைஞர்  பிரிவுத் தலைவர்  டான்  கெங்  லியாங்  கூறினார்.

“கூட்டரசு  அரசமைப்பில்   மலேசியாவில்  ஹுடுட்  சட்ட  அமலாக்கத்துக்கு  இடமளிக்கும்  சட்டவிதி  எதுவும்  இல்லை  என  நம்புகிறோம். மலேசியா உருவாக்கப்பட்டபோதும்  அதற்கு ஒப்புக்கொள்ளப்படவில்லை”, என்றாரவர்.

ஹுடுட்  சட்டவரைவைத்  தாக்கல்  செய்யப்படுவதைத் தடுக்க  முடியாத  டிஏபி-இன்  லிம்  கிட்  சியாங்கும்  அவரின்  மகன்  குவான்  எங்கும்  பதவி  விலக  வேண்டும்  என்றும்  டான்  கோரிக்கை  விடுத்தார்.