அம்னோ பிரதிநிதிகள் அனைவரும் ஹுடுட் சட்டவரைவுக்கு ஆதரவு

kelantanகிளந்தான்  சட்டமன்றத்தில், 1993 ஷியாரியா  குற்றவியல்  சட்டத்துக்குத் திருத்தம்  கொண்டுவரும்  சட்டவரைவு  தாக்கல் செய்யப்பட்டபோது  முன் எப்போதுமில்லாத  வகையில்  எதிரணியினர்  அத்தனை  பேரும்  அதற்கு  ஆதரவு  தெரிவித்தனர்.

அச்சட்டவரைவுமீது  முதலில்  பேசிய   எதிரணி பிரதிநிதியான  கொக்  லானாஸ்  சட்டமன்ற  உறுப்பினர் முகம்மட்  அல்வி  சே  அஹ்மட், ஹுடுட்  சட்ட  அமலாக்கத்தில்  எதிர்ப்படும்  “எல்லாத்  தடைகளையும்”  சமாளிக்க  கிளந்தான்  அம்னோ  மாநில  அரசுக்கு  உதவும்  என்றார்.

“பல தரப்பினரும்  நம்மைத்  தடுக்கப்  பார்க்கிறார்கள். இதன்  தொடர்பில்  மாநில  அரசுக்குப் பல  இடையூறுகள்  ஏற்படலாம்  என  அஞ்சுகிறேன். அவற்றை  ஒன்றுபட்டு  எதிர்கொள்வோம்”, என்று  முகம்மட்  அலி  கண்ணீர்  மல்கக்   கூறினார்.

கிளந்தான்  சட்டமன்றத்தில்  அம்னோ 12  இடங்களை  வைத்துள்ளது.