டெக்சி, பேருந்து கட்டணங்கள் உயர்கின்றன

taxiஏப்ரல்  முதல்  தேதியிலிருந்து  டெக்சி, பேருந்து  கட்டணங்கள்  உயரும்.

தொடக்கக் கட்டணம்  ரிம3  என்பதில்  மாற்றமில்லை  என்றாலும்  இப்போது ஒவ்வொரு 115 மீட்டருக்கும் 10 சென்  என்றிருப்பது  ஒவ்வொரு  200 மீட்டருக்கும்  25 சென்னாக திருத்தி  அமைக்கப்படுகிறது.

மிட்  வேலியிலிருந்து  சன்வே  பிரமிட்  செல்வதாக  வைத்துக்  கொண்டால்  அந்த 11.6 கிலோ  மீட்டர்  பயணத்துக்கு  இப்போது  கொடுக்கும்  கட்டணம்  ரிம12.20. இது  இனி,  ரிம16.25 ஆகும். அதாவது  33 விழுக்காடு  கூடுகிறது.

விரைவு  பேருந்துகளின்  கட்டணம் நடப்பில்  கிலோ  மீட்டருக்கு  9.3 சென்னாக  இருப்பது  ஒவ்வொரு  கிலோ  மீட்டருக்கும்  11.4 சென்னாக  உயரும். அதாவது 22.6 விழுக்காடு  உயர்கிறது.

கோலாலும்பூரிலிருந்து  ஈப்போ  செல்லும் பயணிகள்  முன்பு  ரிம20.60 சென்  கொடுத்த  இடத்தில்  இனி  ரிம25.30 கொடுக்க வேண்டி  வரும்.