பாஸுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பீர்: பக்கத்தானுக்கு டிஏபி எம்பி வலியுறுத்து

gobindகிளந்தான்  சட்டமன்றத்தில்  ஹுடுட்  சட்டவரைவு  நிறைவேற்றப்பட்டதன்வழி   பக்கத்தான்  கூட்டணியின்  பொதுக்  கொள்கைத்  தளம் மீறப்பட்டிருக்கிறது  என்றும்  அதற்காக  பாஸுக்கு  எதிராக நடவடிக்கை  எடுக்க  வேண்டும்  என்றும்  டிஏபி  எம்பி  ஒருவர்  கேட்டுக்  கொண்டிருக்கிறார்.

“பக்கத்தான்  ரக்யாட்  மக்களின்  நம்பிக்கையைத்  திரும்பப்  பெற  விரைந்து  செயல்பட  வேண்டும்.

“அது  பொதுக்  கொள்கை  கட்டமைப்பு,  மக்களுக்களித்த  உறுதிமொழிகள் போன்றவற்றைக்  கடுமையான  விசயங்களாகக்  கருதுகிறது  என்பதை   மக்களுக்கு  உணர்த்த  அதைச்  செய்யத்தான்  வேண்டும்”, என  பூச்சோங்  எம்பி  கோபிந்த்  சிங்  கூறினார்.

அதைச்  செய்யாவிட்டால், அடுத்த  பொதுத்  தேர்தலில்  அதன்  விளைவுகள் விபரீதமாக  இருக்கும்  என்றவர்  எச்சரித்தார்.