ஐஜிபி பதவிவிலகக் கோரி குந்தியிருப்புப் போராட்டம்

protestபக்கத்தான்  ரக்யாட்  ஏற்பாடு  செய்த  ‘கித்தா  லவான்’  பேரணிகளின்  தொடர்பில்  பேரணி  ஏற்பாட்டாளர்கள்  பலர்   அண்மைல்  கைது  செய்யப்பட்டதை  அடுத்து  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  பதவி  விலகக்  கோரும்  இயக்கமொன்று  இன்று  தொடக்கப்பட்டது.

இதையொட்டி  ஒரு  வார-காலத்துக்கு  24-மணி  நேர  குந்தியிருப்புப்  போராட்டம் ஒன்று  மார்ச்  21  தொடங்கி  மார்ச் 28வரை  டட்டாரான்  மெர்டேகாவில்   நடைபெறும்  என  தேஜா  சட்டமன்ற  உறுப்பினரும்  ‘கித்தா  லவான்’  ஏற்பாட்டாளர்களில்  ஒருவருமான  சாங்  லி  காங்  கூறினார்.

“மக்களின்  உரிமைகளை  மீறும் போலீசாரின்  செயல்களுக்குப்  போலீஸ்  படைத்  தலைவர்தான்  பொறுப்பு”, என சாங்  இன்று  கோலாலும்பூரில்  நடைபெற்ற  செய்தியாளர்  கூட்டமொன்றில்   கூறினார்.

காலிட்டின்  தலைமையில்  “எதிர்ப்புக்  குரல்களை  ஒடுக்கும்”  கருவியாக  போலீஸ்  பயன்படுத்தப்பட்டு  வருவதாக  அவர்  சொன்னார். மார்ச்  7-இல்  தொடங்கிய  பேரணிகளின்  தொடர்பில்  இதுவரை  10 சமூக  ஆரவலர்களையும்  எதிரணித்  தலைவர்களையும்  போலீசார்  கைது  செய்திருப்பதை  அவர்  சுட்டிக்காட்டினார்.