எப்போதும் உறுதுணையாக இருப்போம்: பிரதமரிடம் பிஎன் தலைவர்கள் வலியுறுத்து

bnபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைப்  பதவி  இறக்க மறைமுக  முயற்சிகள்  நடப்பதாக  ஊகங்கள்  பெருகிவரும்  வேளையில்  பிஎன்  பங்காளிக்  கட்சிகளின்  தலைவர்கள்  அவருக்கு  முழு  ஆதரவைத்  தெரிவித்துக்  கொண்டனர்.

“பங்காளிக்  கட்சித்  தலைவர்களான  நாங்கள்  நஜிப்பின்  தலைமைத்துவத்துக்கு  எங்களின்  ஆதரவைத்  தெரிவித்துக்  கொள்வதுடன் பிஎன்னை  வழிநடத்துவதற்கும்  நாட்டின்  உருமாற்றத்துக்கும்   என்றென்றும்   அவருக்கு உறுதுணையாக இருப்போம்  என்பதையும் தெரிவித்துக்  கொள்கிறோம்”, என  மசீச  தலைவர்  லியோ  தியோங்  லாய்  இன்று  நாடாளுமன்றத்தில்  கூறினார்.

அவருடன்  சரவாக்  முதலமைச்சர்  அடினான்  சாதேம், மஇகா  தலைவர்  ஜி.பழனிவேல், பிபிபி  தலைவர்  எம். கேவியெஸ் , கூட்டரசு  பிரதேச  அமைச்சர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர்  முதலான  தலைவர்கள்  காணப்பட்டனர்.

நஜிப்புக்கு  ஆதரவு  தெரிவிப்பது  என்பது  பிஎன்  கட்சிகள்  சேர்ந்து எடுத்த  ஒரு  பிளவுபடாத  முடிவு  என  பெசாக்கா  பூமிபுத்ரா பெர்சத்து  தலைவரான  அடினான்  கூறினார்.

அது  தீவகற்ப  மலேசியாவையும்  சாபா, சரவாக்கையும்  சேர்ந்த  பங்காளிக்  கட்சிகளின்  ஒருமித்த  முடிவு  என்றாரவர்.