கிளந்தான் சட்டமன்றத்தில் ஹூடுட் மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சில பாஸ் தலைவர்களை நம்பியது குறித்து டிஎபியின் தலைமைச் செயலாளர் தமது அச்ச உணர்ச்சியை வெளிப்படுத்தினார்.
எவர் பெயரையும் குறிப்பிடாமல், பாஸ் மாநில அரசு தாக்கல் செய்திருந்தது பழைய 1993 ஆம் ஆண்டு ஷரியா சட்டத்திற்கான திருத்தங்கள் அல்ல; அவை முற்றிலும் புதிய சட்டத்திற்கு ஈடாகும் என்று லிம் கூறினார்.
பாஸ் தேசிய தலைவர்களின் வாக்குறுதிகளும் பேச்சும் மதிப்பற்றவைகளாகவும் அவை அம்னோவிலிருந்து வேறுபாடற்றவைகளாகவும் இருக்கையில் டிஎபி தொடர்ந்து அவர்களுடன் பக்கத்தான் தேசிய மேடையில் ஒத்துழைக்க முடியுமா என்று அவர் வினவினார்.
அம்னோவின் வலையில் சிக்கிக் கொண்டு ஹூடுட் பற்றிய பாக்கத்தானின் பொதுவான கொள்கைக்கு துரோகம் இழைத்து விட்டு கிளந்தான் சட்டமன்றத்தில் ஹூடுட் சட்டத்தை இயற்றியதின் வழி பாஸ் கிளந்தானில் அதன் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டதோடு பாக்கத்தானை அழிக்கும் அம்னோவின் கனவை நனவாக்க உதவியுள்ளது என்று குவான் எங் மேலும் கூறினார்.
மதம் பிடித்த யானை தன் தலையிலேயே மண்ணை வாரி போடுக்குமாம். அப்படிதான் பாஸ் கட்சியும் தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டது. இன்னும் மலாய்க்காரர் அல்லாதோர் இந்த கட்சியுடன் கூட்டணி என்பது கேலிக்குரியாதாகி விடும். உடனே பாஸ் கட்சியுடன் ஒட்டு உறவுகளெல்லாம் வெட்டப் படுகின்றது என்று அறிவித்தால் ஜ.செ.க. அடுத்த தேர்தலில் தாக்குப் பிடிக்க முடியும். இல்லையேல். கோவிந்தா! கோவிந்தா!.