அம்னோ: ஹூடுட் விவகாரத்தில் மசீச, கெராக்கான் தலையிடக்கூடாது

 

sabriஹூடுட் சட்டம் கிளந்தானில் அமல்படுத்தப்படும் விவகாரத்தில் தலையிடக் கூடாது என்று டிஎபியிடம் கூறிய பின்னர், அம்னோ இப்போது அதன் பின் பங்காளிக் கட்சிகளிடமும் அவ்வாறே கூறியுள்ளது.

அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியாவின் செய்திப்படி அம்னோ உச்ச மன்ற உறுப்பினரும் மற்றும் அமைச்சருமான இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் பாரிசான் நேசனல் பங்காளிக் கட்சிகளிடமும் அவ்வாறே கூறியுள்ளார். நேற்று, அவர் கெராக்கான் மற்றும் மசீச ஆகியவை இந்த விவகாரத்தில் தலையிடக் கூடாது ஏனென்றால் ஹூடுட்டுக்கும் அக்கட்சிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

“பிஎன் பங்காளிக் கட்சிகளான கெராக்கான் மற்றும் மசீச ஆகியவற்றின் நடவடிக்கைகளில் எவ்வித நியாயமும் இல்லை.

“அம்னோ முழு ஆதரவு தெரிவித்திருந்தால் (ஹூடுட் சட்டத்திற்கு) அதனை அவர்கள் பிஎன்னின் உச்சமன்றத்திடம் கொண்டு செல்ல வேண்டும். அவர்களின் நிலைப்பாட்டை திடீரென்று பகிரங்கமாக தெரிவிப்பதல்ல.

“ஹூடுட் சட்டத்திற்கும் அவர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை, ஏனென்றால் அதன் அமலாக்கம் இஸ்லாமியர்களுக்கானது.

“நாங்கள் அவர்களது சமய விவகாரத்தில் தலையிட்டேதே இல்லை என்பதைப் போல்” கெராக்கான் இஸ்லாமிய விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று இஸ்மாயில் சாப்ரி கூறினார்.

Kelantan Hudud law