வறுமைக் கோடு உண்மை நிலவரத்தைப் பிரதிபலிக்கவில்லை

povertyகூட்டரசு அரசாங்கம்  வறுமைக்  கோட்டைக்  குறைந்தது  மாதம்  ரிம1,500  என்ற  நிலைக்கு  உயர்த்த  வேண்டும்  என்பதை  வலியுறுத்திய  சிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி,  அதுதான்  பொருளாதாரச்  சூழலின்  “நடப்பு  நிலவரத்தை”ப்  பிரதிபலிப்பதாக  இருக்கும் என்றார்.

இப்போது  ரிம900  என்றிருக்கும்  வறுமைக்கோட்டுக்  குறியீடு  திருத்தப்பட்டால்  வறுமைக்கோட்டுக்  கீழே  வாழும்  மலேசியர்  எண்ணிக்கை  40  விழுக்காடாக அதிகரிக்கும். அஸ்மின்,  இன்று ஷா  ஆலமில், சமத்துவமின்மை  என்ற  கருத்தரங்கில்  பேசியபோது  இவ்வாறு  கூறினார்.

அதே  அக்ருத்தரங்கில்  பேசிய  டிஏபி  கிள்ளான்  எம்பி  சார்ல்ஸ்  சந்தியாகு, இப்போதுள்ள  வறுமைக்கோடு  நடப்பு நிலவரத்துக்குப்  புறம்பானது  என்றார். சில  இடங்களில்  ஓர்  அறையின்  வாடகையே  குறைந்தபட்ச  சம்பளத்துக்கு  இணையாக இருக்கிறது  என்றார்