கிளந்தான் துணை மந்திரி புசார் முகம்மட் அமார் நிக் அப்துல்லா, நாட்டில் உள்ள முஸ்லிம் அல்லாதார் ஹுடுட்டை எதிர்க்கவில்லை என்றும் டிஏபி மட்டும்தான் எதிர்ப்புக்குரல் கொடுத்து சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறது என்றும் கூறினார்.
அமார் நேற்று மலேசியாகினியிடம் பேசினார்.
“எதிர்ப்புக் குரல் கொடுப்பவர்கள் முஸ்லிம்- அல்லாதவர்கள் அல்லர். டிஏபி மட்டுமே. கிளந்தானில் ஆய்வு செய்வீர்களானால், முஸ்லிம்-அல்லாதார் ஹுடுட்டில் பிரச்னை இல்லை என்றுதான் சொல்வார்கள்.
“சத்தம் போடுவதெல்லாம் அரசியல்வாதிகள்தாம். ஏனென்றால் அவர்களுக்கு அரசியல் நோக்கம் உண்டு. முகநூலைப் பாருங்கள், முஸ்லிம்-அல்லாதார் எத்தனை பேர் ஹுடிட்டை ஆதரிக்கிறார்கள் என்பது தெரியும்”, என்றவர் கூறிக் கொண்டார்.
மலேசியாகினி அண்மையில் நடத்திய ஆய்வில் அம்மாநிலத்தில் உள்ள முஸ்லிம்-அல்லாதார் பலர் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தின் அமலாக்கத்தை வரவேற்பதாகக் கூறினர்.
நாங்கள் அனைவரும் ஹுடுடை வரவேகிரோம் ஒரு நிப்தபதனைக்குள் அதாவது : லஞ்ச ஒலிப்பில் உங்கள் தண்டனை விவரம் வேண்டும், சுத்தி சுத்தி செக்சுல மறைக்காம லஞ்சம் கொடுத்தவன் வாங்கினவன் கரம் துண்டிக்க படுமா அல்லது அன்வார்ருக்கு மட்டும் கட்டிங்க அல்லது நூருல்லுக்கு ஆப்பா
டி.எ.பி. தலைவர்கள் ஹுடுட்டை எதிர்பதற்கு காரணம் உண்டு. டி.எ.பி.யின் ஆதரவாளர்கள் பெரும்பாலோர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள். அந்த சமூகத்தவர்களில் பெரும்பாலோர், சூதாட்ட மையங்களை நடத்துவதும், மதுபான மையங்களை வைத்திருப்பதும், ஒரு சிலர் போதை பொருள் வியாபாரங்களில் ஈடுபடுபவர்களாகவும் உள்ளனர். மேலும், வழக்கறிஞர்கள் மாடமாகவும் டி,எ,பி. திகழ்கிறது. கொலை,கொள்ளையர்கள்,அடி தடி பேர்வழிகளின் பாதுகாப்பாளர்களே இந்த டி.எ.பி.வழக்கறிஞர்கள் . இப்போது சொல்லுங்கள், டி.எ.பி. வாயை மூடிக் கொண்டிருக்குமா?
ஹுடுட் சட்டத்தை ஒரு இஸ்லாமிய சட்டம் என்று பார்க்காமல், அது மானிடர்களிடையே ஒரு நல்லொழுக்கத்தை உண்டுபண்ணும் சட்டம் என அங்கீகரிக்கப்படுமானால், அதில் தவறேதும் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.
ஹுடுத் எனும் ஒரு சட்டம் வெறும் எளிதான சமுதாய பிரச்சனைகளை மட்டுமே கையாளக் கூடியது என்று பாஸ் அல்லாத சமய அறிஞர்கள் ஆதாரத் தோடு சொல்லுகின்றனர். பாஸ் வெறும் அரசியல் லாபத்தை அடிப்படையாகக் கொண்டு சமயத்திர்க்கே எதிராக செயல் படுகின்றது.
பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகே இருண்டு விட்டதாக எண்ணிக் கொள்ளுமாம். அதைப் போல இந்த அறிவிலி பேசுகின்றார். இந்த சட்டத்தை கிளந்தான் சட்டமன்றத்தில் ஏற்ற பிறகு ஏன் நாடாளுமன்றத்திற்கு நீங்கள் போக வேண்டும்?. நாடாளுமன்றத்தில் இந்நாட்டு அரசியல் சாசனத்தை மாற்ற தனிநபர் தீர்மானம் கொண்டு வருவது எதற்காக?. இந்த ஹுடுத் சட்டத்தை கொல்லை வழியாக கொண்டு வந்து இந்நாட்டு அரசியல் சாசனத்தின் ‘basic structure’ – ரையே மாற்ற நினைப்பதுதானே அம்னோ பாஸ் கட்சியின் கூட்டணித் தந்திரம். இதுநாள் வரை ‘secular’ என்று சொல்லக் கூடிய அரசியல் சாசனமாக இருந்தது. அதற்கு அப்புறம் ‘இஸ்லாமிய அடிப்படையிலான’ அரசியல் சாசனம் என்று சொல்லி இஸ்லாமியர் அல்லாதவரின் தலையில் கை வைக்கவே இந்த நாடகம் என்பது எங்களுக்குத் தெரியாத என்ன?. உங்களை விட நாங்கள் தெளிந்த அறிவாளிகள்தான். அதனால், ஜ.செ.க. மட்டும் எதிர்க்கவில்லை. அவர்களுடன் சேர்ந்து அறிவார்ந்த முஸ்லிம் மக்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் எதிர்க்கின்றனர் என்பதை தெரிந்தும் தெரியாதது போல் நடிப்பதேன்?.
Mr. Singam you are missing the point!
ஹுடுட் சட்டத்தை அமல் படுத்திதான் பார்ப்போமே, இந்த சட்ட அமல் படுத்தி குற்றங்கள் குறைந்தால் நல்ல விசயம்தானே.
ஹுடுட் சட்டத்தை ‘அடி அவாங்’ அவர்கள் மிக நுட்பமாக கிளந்தான் மாநிலத்தில் கொண்டு வந்து விட்டார் என்பதே உண்மை ! அவர் இப்போது BN கையால் ! PKR கூட்டணியை உடைப்பதே தலையாய பனி இந்த அடி அவாங்கு ! கடந்த தேர்தலில் கெஅடிலான் போட்டியிட்ட இடத்தில் பாஸ்சும் போட்டியிட்டது குறிப்பிட்டதக்கது ! GST ,HUDUD என்று கிளப்பிவிட்டு மக்களின் சிந்தனையை சிதறடிப்பது இந்த அம்னோவின் முள்ளமாரி செயல் என்பது மூத்த அரசியவாதிக்கும் புரியாமல் போனது வருத்தமே !
ஹுடூட் சட்டம் இன்று முஸ்லிம்முக்குமட்டும் என்பார்கள் நாளை பொது என்பார்கள் சட்டம் அவர்கள் கையில் !ஆட்டை கடித்து ,மாட்டை கடித்து மனிதனை கடிக்கும் நிலை வரும் அதை அறிந்துதான் சீனர்கள் விழிப்படைந்து எதிர்க்கிறார்கள் மறைத்த கர்ப்பால் சிங் அவர்களும் வலியுறித்தினார் ஆனால் சில ம…………மேதவிகள் ஆதரித்துவிட்டு பிறகு அம்பு நம்மை நோக்கி வரும்போது வறுந்தி என்னப்பயன் ?
தேனீ தெளிவா கொட்டி இருக்கு …
9. Is Hudud only applicable to Muslims?
In countries with a population that are not predominantly Muslim (e.g Nigeria and Sudan), the laws are not applicable to non-Muslims. In countries where non-Muslims are of very small minority or non-existent and where an Islamic state is established (such as in Saudi Arabia, Iran), Hudud offences and punishments are incorporated into the law of the land and apply to all citizens.
http://www.aliran.com/archives/monthly/2002/6e.html
அடாடா….நல்ல கண்டுபிடிப்பு…தமிழ் நந்தா..சூதாட்ட மையங்களை நடத்துவதும்,” மதுபான மையங்களை வைத்திருப்பதும், ஒரு சிலர் போதை பொருள் வியாபாரங்களில் ஈடுபடுபவர்களாகவும் உள்ளனர். மேலும், வழக்கறிஞர்கள் மாடமாகவும் டி,எ,பி. திகழ்கிறது. கொலை,கொள்ளையர்கள்,அடி தடி பேர்வழிகளின் பாதுகாப்பாளர்களே இந்த டி.எ.பி.வழக்கறிஞர்கள் . இப்போது சொல்லுங்கள், டி.எ.பி. வாயை மூடிக் கொண்டிருக்குமா?” இதை நான் லைக் பண்றேன் சிங்கம்…உண்மை…
நண்பர் தேனீ! உங்கள் வாதம் உங்களுக்கு நியாயமாக படலாம். அதேவேளை உங்கள் கருத்தில் தவறு இருப்பதாக நானும் நினைக்கவில்லை. காலம்தான் பதில் சொல்லும். கிளந்தான் மாநிலத்தில் கொண்டு வரப்பட்ட இச்சட்டம் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக முன்வைக்கப்படும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படும். தேசிய முன்னணிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காது. மொத்தமுள்ள 222 இடங்களில் 88 இடங்கள் மக்கள் கூட்டணியினுடையது. இதில் பாஸ் கட்சியின் 23 இடங்கள் கழிந்தாலும் மீதம் 65 இடங்கள் அதற்கு உள்ளன . இதனுடன் ம.இ.கா. ம.சி.ச. கெராக்கான், பெருவாரியான சபா, சரவா உறுப்பினர்களும் சேர்ந்து கொள்வர். ஆக, தற்போதைய தே.மு. வின் 134 இடங்களில் பெருவாரியான வாக்குகள் குறையக்கூடும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது 148. தே.மு. இதனை கொண்டு வரும் சாத்தியம் உண்டென்றால், ஹுடுட் சட்டமாகிவிடும். பொறுத்திருந்து பார்ப்போம்.
“ஹுடுட் சட்டத்தை அமல் படுத்திதான் பார்ப்போமே”, “அது அமல்படுத்துவதில் தவறு ஏதும் இல்லை” என்போர் சட்ட நுணுக்கங்களையும், இந்நாட்டு இஸ்லாமியரில் ஒரு பகுதியினர் தீவீரவாத இஸ்லாமிய கோட்பாடுகளை புகுத்த முயற்சிக்கின்றனர் என்பதையும் அறியாமல் பேசிக் கொண்டிருக்கின்றனர் என்பது திண்ணம். இஸ்லாமிய அடிப்படையிலான அரசாங்கம் என்பதற்கு அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டதிட்டம் இடம் கொடுக்க வேண்டும். இதுவரை சரியா நீதிமன்றத்திற்கு இஸ்லாமியர்கள் ‘personal law’ எனப்படும் அவர்களின் குடும்ப வாழ்க்கை நெறிக்கு வேண்டிய தனிபட்ட வழக்குகளை மட்டுமே விசாரித்து தண்டனை வழங்க அதிகாரம் உள்ளது. இதற்கு இந்தியாவின் அரசியல் சட்டத்திலும் இடம் உண்டு. ஆனால் நம் அரசியல் சாசனத்தில் சிவில் சட்டத்திற்கு உட்பட்ட குற்றங்களுக்கு சரியா நீதிமன்றத்திலும் விசாரிக்கப் படலாம் என்றால் இங்கே இஸ்லாமிய மத கோட்பாட்டின் அடிப்படையில் விசாரணை செய்யவும், தீர்ப்பு வழங்கவும் சரியா நீதிமன்றத்திற்கு இடம் கொடுக்கப் படும். அப்படியானால் இது இஸ்லாமிய மதத்தின் அடிப்படையில் உள்ள அரசியல் சாசனம் என்று உள்துறை அமைச்சகத்தில் உள்ள முல்லாவும் சேர்த்து சொல்ல வாய்ப்பு அளிக்கப் போகின்றீர்களா?. மேலும் புதிய ஹுடுத் சட்டத்தின்படி ஒருவர் தான் செய்த குற்றத்திற்கு சரியா நீதிமன்றத்திலோ அல்லது சிவில் நீதிமன்றத்திலோ விசாரிக்கபட தாங்களே முடிவெடுக்கலாம் என்று இருப்பதாகவும் அறிகின்றேன். இது உண்மையானால் அப்புறம் தனக்கு வசதியாக நீதிமன்றத்தை தேர்ந்தெடுக்க அவரவருக்கு உரிமை கொடுத்தால் சட்டமும் ஒழுங்கும் பந்தாட்டம் ஆட ஆரம்பித்து விடும். இப்பொழுது இருக்கும் மத மாற்றத்திற்கு பின் வரும் பிரச்சனைகளை கையாள இந்நாட்டு சிவில் நீதிமன்றம் திக்கு முக்காடுகின்றது. அதில் இது வேறு புதிய பிரச்சனைகளை கிளப்ப வேண்டுமா?. எ.கா. முஸ்லிம் அல்லாதோர் கற்பழிப்பு செய்து விட்டு மதம் மாற்றிக் கொண்டால் எந்த சட்டத்தைக் கொண்டு விசாரிப்பது?. செம்பருத்தியின் ஆசிரியர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த ஹுடுத் சட்டத்தில் இருக்கும் சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து ஒரு கட்டுரை வரையவும். அப்புறம் இதைப் பற்றி மேலும் பேசலாம்.
மதிப்பிற்குரிய சிங்கம் அவர்களே, நான் அறிவிலி என்று சொன்னது அந்த துணை மந்திரி பெசாரைக் குறித்தது. மேலும் இன்று ‘Malaysian Insider- ல் வெளியிடப் பட்டிருக்கும் முந்நாள் தலைமை அரசாங்க வழக்கரிஞரின் செய்தியை வெட்டி ஒட்டி உள்ளோம். இதையும் படித்துப் பாருங்கள்:
“Hudud will cause confusion and injustice to the people even if federal legislators made amendments to the laws to implement the Islamic penal code in Kelantan, former attorney-general Tan Sri Abu Talib Othman said.”
“He said as Malaysia was a multiracial and multi-religious country, a parallel criminal justice system was not practical.
“I hope our legislators in Parliament will look into this matter in the right perspective and not be blinded by politics,”
“The reality is that the implementation of hudud in Kelantan will result in confusion and injustice to parties,”
முந்நாள் தலைமை அரசாங்க வழக்கரிஞரை விட நாம் என்ன சட்டத்தில் கை தேர்ந்தவரா? சட்டம் அறிந்தவரே இவ்வாறு சொல்லும்பொழுது நாம் பாஸ் கட்சியின் ஹுடுத் சட்டத்தை ஆதரித்தால் எதிர்வரும் சந்ததியினருக்கு நாம் பெரும் துரோகம் இழைத்து விடுவோம் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். இன்று காலையில் இது சம்பந்தமாக மேலும் ஒரு கருத்தை பதிவிட்டேன். ஏனோ அக்கருத்து இன்னும் பிரசுரிக்கப் படவில்லை!.
அமல்படுதிதான் பார்ப்போமே, குற்றங்கள் குறைந்தால் சரியே.துபாய் கத்தார், ஈரான், பஹரின்,துனிசியா,அல்ஜீரியா,சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இந்த சட்டம் அமலில் உள்ளது,அந்த நாடுகள் நன்றாக தானே உள்ளது.
குற்றங்கள் குறைய அதனை அமல்படுத்துவோர் நீதி நியாயத்திற்கு கட்டுப்பட்டு நேர்மையான முறையில் செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால் இன்று இருக்கும் சிவில் சட்டங்களே குற்றங்களை ஒழிக்கப் போதுமான தடுப்பாக இருக்கும். இங்கே வேலியே பயிரை மேயும் பொழுது எத்துனை சட்டம் வந்தாலும் என்ன பயன்?. ஹுடுத் சட்டம் வந்தாலும் ஆளைப் பார்த்து, அழகைப் பார்த்து செயல்படுத்தினால் குற்றங்கள் குறைந்து விடாது நண்பர்களே. திருடனாகப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது நண்பர்களே. குறை சட்டத்தில் இல்லை. அதனை அமுலாக்கம் செய்வோரிடமும், பொது மக்களின் பயமும், நமக்கு என்ன வந்தது அவனைத் தட்டிக் கேட்க என்ற தவறான கோட்பாடும்தான் இன்றைய குற்றங்கள் மேலோங்கி வளரக் காரணம். தவறு ஓரிடம் இருக்க, தண்டனை வேரிடமாக வைத்து விடார்தீர்கள் நண்பர்களே. இது இத்தலைமுறைக்கு உரிய பிரச்சனை மட்டும் அல்ல. நமது எதிர்கால சந்ததியினருக்கும் உரிய பிரச்சனை என்பதை அறிந்து கருத்துச் சொல்லுங்கள். இன்று துன் சம்பந்தன் நம்மை கை விட்டு விட்டார் என்று ஒரு சிலர் புலம்புவதுப் போல் பின்னாளில் நம் பிள்ளைகள் நம்மை தூற்ற வைத்து விடாதீர்கள்.
நண்பர் தேனியின் கருத்துக்களில் ஒரு சில எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், பொதுவாக சிந்திக்கும் தன்மை வாய்ந்தவை, நம் நாட்டை பொருத்தவரையில், அவரற்கு சாதகமாக இருப்பவைகளை ஏற்றுக் கொள்கிறார்கள், பாதகமாக இருப்பின் எதிர்கிறார்கள். இன்று பெருந்தலைவர் லீ குவான் இயு மறைந்த தினம். அவர் எப்போதுமே ஒன்று சொல்வார். இவ்வேளையில் அது நமக்கு பொருந்தும். Race,Religion, Language,matters will weaken a country ,s image, என்பார். இம்மூன்று விஷயங்களில் நமது நாடு குட்டிச்சுவராகி வருகிறது.
ஹலோ tamilan நீங்கள் அந் நாடுகளில் வாழ்ந்திருக்கின்றீர்களா? அடிமைகளாக எந்த நாட்டிலும் வாழமுடியும் — அது வாழ்க்கையா? அதுவும் பிற மதத்தினராக இருந்து பாருங்கள். இங்கேயே எத்தனை கோயில்கள் உடை பட்டு இருக்கின்றன? இது மட்டுமா? ISIS இங்கு வர எவ்வளவு நேர மாகும்? அடக்கு முறைக்கு நீங்கள் உடன் படலாம் — இந் நாட்டின் அரசிலமைப்பு சட்டங்கள் அதனை பின்னணியாக எழுதப்பட வில்லை.
குற்றங்கள் குறைய நல்ல சமூக கலை கல்வி சமத்துவமும் மற்றும் கலாச்சாரமும் உயர்வு தாழ்வு இல்லாத நாகரிகமும் இருந்தால் குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது. குற்றவாளின் கையையும் கால்களையும் வெட்டினால் அவன் குடும்பம் என்னாவது? அத்துடன் பேராசை இல்லா சமூகத்தை உருவாக்கினால் எல்லாமே சரியாகி விடவும் பெருமளவில். அடக்குமுறையினாலும் மற்ற மனிதாபிமானம் இல்லா வகையில் செயல் படுவது நியாமாகுமா?
இந்த ஹுடுட் சட்டம் விஷயத்தில் யாரும் மண்டையை போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். இந்த சட்டத்திற்கு அங்கீகாரம் பெரும் இடம் நாடாளுமன்றம். நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் அமுல் பெற வேண்டுமாயின், அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படும். என்ன குட்டிக் கரணம் போட்டாலும் பாஸ் கட்சி கொண்டு வரும் இந்த பிரேரணையை ஆதரிக்க 149 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவைப்படுவர். இந்த எண்ணிக்கையை பெற பாஸ் கட்சிக்கு சாத்தியமே இல்லை. நிம்மதியாக தூங்குங்கள் சாரே!
நாடாளுமன்றத்தில் இன்று வெற்றி இல்லை என்றாலும் இதுவே 10 வருடம் கழித்து வந்தால் நிலைமை எவ்வாறிருக்கும்?. எதற்கும் நமக்கு முன் எச்சரிக்கை தேவை. இந்த ஹுடுத் சட்டம் பொது மக்களுக்கு பெரிய பொருட்டாக தெரியவில்லை என்றாலும் முந்நாள் சட்டத்துறை தலைமை வழக்கறிஞர் போன்றோருக்கும், திரு. குலா போன்று சட்டத்துறையில் உள்ளோருக்கும் இது பாதாளம் வரை பாயும் ஈட்டி என்பதால் பெரும் கவலையை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
சிங்கம் அவர்களே…சிங்கை பற்றி எழுதி இருக்கிறீர்கள்…தங்கள் குறிப்பிட்ட “Race,Religion, Language,matters will weaken a country ” இன்று இல்லை ஐயா…அனுபவத்தில் சொல்கிறேன்…இன்றைய நிலை வேறு…