இன்று பின்னேரத்தில், சுதந்திற்கான வழக்குரைஞர்கள் (எல்எப்எல்) என்ற அமைப்பின் இணை நிறுவனரான எரிக் பால்சன் அவர் செய்திருந்த டிவிட் செய்திக்காக கைது செய்யப்பட்டார் என்று அவரது வழக்குரைஞர் மலேசியாகினியிடம் மாலை மணி 6.30 அளவில் கூறினார்.
தற்போது அவர் டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை தடுப்புக்காவலில் வைக்க போலீசார் எண்ணம் கொண்டுள்ளனர்.
எரிக் பால்சன் பாஸ் மற்றும் அதன் ஹுடுட் சட்டம் பற்றி டிவிட் செய்ததற்காக கைது செய்யப்பட்டிருப்பதாக எல்எப்எல்லின் இன்னொரு உறுப்பினரான லதீபா கோயா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“ஹுடுட் சட்டம் நியாயமானதா, இல்லையா என்று கேட்க பால்சன் யார்? அது ஓர் உணர்ச்சி வசமான பிரச்சனை, அதை ஏன் கேட்க வேண்டும்”, என்று ஐஜிபி கடிந்து கொண்டதாக த ராக்யாட் போஸ் செய்தி கூறுகிறது.
“ஹுடுட் சட்ட அமலாக்கத்துடன் எல்லாம் சரியாகி விடும் என்று நம்பாதீர்கள் – மலேசியாவில் ஹூடுட் சுமுகமாக செயல்படும் என்பதற்கு அடிப்படை இல்லை” என்ற பால்சனின் டிவிட்டை அந்த செய்தித் தளம் பதிவு செய்துள்ளது.
இது பால்சனின் இரண்டாவது கைது ஆகும்.
இவனை புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்…