ஹுடுட் சட்டத்திற்கு மஇகா ஆதரவு இல்லை

micrejectshududமலேசிய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானதாக இருக்கிறது என்று கூறப்படும் தனிப்பட்ட உறுப்பினரால் தாக்கல் செய்யப்படும் ஹூடுட் மசோதாவுக்கு மஇகா ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் தலைவர் ஜி. பழனிவேல் இன்று கூறினார். இந்த விவகாரத்தில் மசீச மற்றும் கெராக்கான் போன்ற பிஎன் பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாட்டை மஇகா பகிர்ந்து கொள்கிறது என்று அவர் மேலும் கூறினார். “நாங்கள் எதிர்ப்பதோடு அதை (ஹூடுட் சட்டம்) ஆதரிக்க மாட்டோம். தேவான் ராக்யாட் கூட்டம் முடிவுற்ற பின்னர் நான் எனது அறிக்கையை வெளியிடுவேன்”, என்று பழனிவேல் இன்று பட்டர்வொர்த்தில் கூறினார்.