செம்பகா இடைத் தேர்தலில் பாஸ் வெற்றி

 

paswinsகிளந்தான் சட்டமன்ற செம்பகா தொகுதியில் இன்று நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஸ் கட்சியின் வேட்பாளர் அஹமட் பாதான் மாமுட் 10,000 க்கு கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட இதர நான்கு வேட்பாளர்களும் படுதோல்வி அடைந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய வைப்புத் தொகையான ரிம5,000 ஐ இழந்தனர்.