சிங்கப்பூரின் முதல் பிரதமரும் அச்சிறிய நவீன நாட்டின் சிற்பியுமான லீ குவான் இயு இன்று அவரது 91 ஆவது வயதில் காலமானார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் அவரது மகன் பிரதமர் லீ ஹிசியன் லூங் அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்கவராக லீ இருந்து வந்தார்.
“சிங்கப்பூரின் நிறுவன பிரதமர் லீ குவான் இயு காலமாகி விட்டார் என்பதை பிரதமர் ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறார்” என்று சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
ஒரு சிறந்த தலைவருக்கு வணக்கமும் மரியாதையும் உரித்தாகுக. சிங்கப்பூர் எனும் ஒரு நாட்டை திறம்பட வழி நடத்தி முன்னேற்ற பாதைக்கு வித்திட்ட தலைவனுக்கு தலை வாங்குகிறோம். இவரப் போன்ற ஒரு தலைவன் நமக்கு இல்லையே என்று நினைக்கும் பொழுது இதயம் கனக்கிறது.
சிங்கப்பூரை மலேசியாவிலிருந்து பிரித்து அனுப்பும்போது, அது ‘உருப்படாமல்’ போகும் என்று சாபம் கொடுத்துத்தான் அனுப்பினார்கள் சில பெரிய ‘மனதுக்காரர்கள்’. ஆனால் அதையெல்லாம் முறியடித்து தனியொரு மனிதனின் சிந்தனையிலும் அரிய முயற்சியிலும் அயரா உழைப்பிலும் உலகிலேயே அதிக சுறுசுறுப்புமிக்க நாடாகவும், சுத்தமான நாடாகவும் அணடை நாடுகள் வெட்கித் தலை குனியும் வண்ணம் இன்று தலைசிறந்து விளங்குகிறது, சிங்கப்பூர். இத்தனைக்கும் அங்கே ரப்பர், செம்பனை, ஈயம் போன்ற இயற்கை வளம் எதுவும் இல்லை…பெற்றோல் இல்லை… ஆனால் இது அத்தனைக்கும் காரணமானவர் லீ குவான் யூ. எனும் மதியுரை மந்திரி. அவரின் மறைவு உலகத்துக்கே பேரிழப்பு.
அவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .
எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்,
போற்றுதலுக்குரிய ஒரு மகான் மறைந்து விட்டார், ஆனாலும் இவரது புகழ் என்றும் அழியாது.
அன்னாரின் உயிர் சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம்.
ஆழ்ந்த இரங்கல்.
ஒரு காலக் கட்டத்தில் தேர்தல் பரப்புரை முடிந்த பிறகு ஒரு சாதாரண அஞ்சடிக்கடையில் அவர் மீ சாப்பிட்டுக் கொண்டிருந்த போது நானும் அங்கிருந்த ஞபாகம் மீண்டும் தலை தூக்குகிறது! அனுதாபங்கள்!
நம் இனத்தில் தலைவனாக 50% லீ குவான் யு வின் திறனும் ஊழல் இல்லாத அந்த தலைமைத்துவமும் இருந்தால் நாம் எப்போதோ எங்கோ போயிருக்கமுடியும். அன்னாரின் சில செயல்பாடுகள் எனக்கு வெறுப்பு இருந்தாலும் அன்னாரை நான் பள்ளியில் படிக்கும்போதே மதிப்பில் கொண்டிருந்தேன். நான் தோட்டத்தில் இருந்திருந்தாலும் அவரின் வழிபாடுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இங்குள்ள சில நாதாரிகளுக்கு காழ்புணர்ச்சி காரணம் நல்ல இரு நாட்டு உறவுக்கு என்றுமே நிச்சயம் கிடையாது.
சேற்றில் மிதந்திருந்த ஒரு நாட்டை உலக அரங்கில் மிளிர வைத்தவர். Father of Modern Singapore . A Great Man .
அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
நவீன சிங்கப்பூரை செதுக்கிய தலைசிறந்த சிற்பி. லட்ச கணக்கான மக்களுக்கு வேலை தரும் நாட்டை உருவாக்கி தந்த மாமனிதர். எனது ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் எனது கண்ணீர் அஞ்சலி. .
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர்போல யார் என்று ஊர் சொல்லவேண்டும் அந்நாட்டு நாணயத்தில் கூட ஒற்றுமையை அனுசரித்த உயர்ந்த மனிதர் அன்னாரின் ஆத்மா சாந்தி அடையவேண்டுகிறேன் .
சிங்கப்பூரின் சிங்கம் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .
தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கி அழகு செய்த பெருமகனார். அன்னாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெருவித்துக் கொள்கிறேன்…!
அன்னாரின் உயிர் சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம்.
RIP Lee Kuan Yew
நமது நாட்டை 58 ஆண்டுகளாக ஆளும் அரசியல்வாதிகள், சிங்கையை உழலற்ற சிறந்த நாடு என்று ஒப்புக்கொண்டதே இல்லை. சிறந்த நிருவாகம், சுத்தமான நாடு மற்றும் இனவாதமற்ற அரசியல் அமைப்பு கொள்கை; இதுவே சிங்கையின் வெற்றி. தென் கிழக்கு ஆசியாவில், ஒரு குறிப்பிட்ட மதத்திற்குச் சொந்தம் என சொல்லிக்கொள்ளும் நாட்டில் உழல் தலை விரித்துக் குத்தாட்டம் போடுகிறது. சிங்கை மத சார்பற்ற நாடு.
ஆழ்ந்த அனுதாபங்கள் ..நல்ல வேலை சிங்கபூர் LEE KUAN YEW கண்ணில் பட்டது .இதே சிங்கபூர் ராமசாமியோ ,சாமிவேலோ ,முனியாண்டியோ போன்றவர்களின் கண்ணில் இந்த சிங்கபூர் பட்டிருந்தால் ? சொல்லவே வேண்டாம் தமிழ் நாடு மாதிரி மூளைக்கு மூளை சுவரில் சீறு நீரகம் கழித்திருப்பார்கள் .ஜாதி சண்ட போட்டே சிங்கபூரை குட்டியசுவராக ஆக்கி இருப்பார்கள் .நல்ல வேலை சீனர் கண்ணில் தென்பட்டது .
சிங்கபூரருக்கும் மட்டுமல்ல ,பல மலேசிய குடிமக்கள் அங்கு வேலை செய்யும் வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுத்தவர் .லீ குவன் யு அவர்களே .உங்களுக்கு தலை வணங்குகிறேன் .
எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்,
அடிப்படை வசதி இல்லாமல் இருந்த இடத்தை இன்று உலகம் உயர்த்ந்து பார்க்கிறது. அவரது உழைப்பு இன்று சிங்கப்பூர் அடைந்த வளர்ச்சியின் அடையாளம்.அவர்கள் மறைவு சிங்கப்பூர் மக்களுக்கு மிக மிக பெரிய இழப்பு.பல முறை மலேசியா முன்னேறாத நாடாக உள்ளதை தெரியபடுத்தியுள்ளார். அனால் அவரது கருத்தை மதிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
நேர்மை , தூய்மை , சமஉரிமை,உழைப்பு இவரது தலைமைத்துவம். அன்னாரது ஆத்மா சாந்தி அடைய அனைவரும் பிரார்த்திப்போம்.
இந்த நூற்றாண்டின் மிக மிக சிறப்பான மனிதர் என்றால் மிகை ஆகாது … இன.. மத ,, நல்லினகத்தோடு … உலகின் பன்னாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பும் கொடுத்து வாழ வைத்த பேரரசன் …அதில் நானும் ஒருவன் என சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன் … அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.. நன்றி ஐயா….
என் கேள்விக்கு என்ன பத்தி ?? அதே சிங்கபூர் தமிழன் கையில் கிடைத்தால் என்னவாயிருக்கும் ??? ஊ,,கோலாதான்