அரசமைப்பையும் சட்ட ஆளுமையையும் பாதுகாக்க இரு தரப்புகளையும் சேர்ந்த எம்பிகள் சேர்ந்து கூட்டு அரசாங்கம் அமைக்க வேண்டும் என்ற டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங்கின் கருத்து “அவசரப்பட்டுத் தெரிவிக்கப்பட்ட கருத்து” என்கிறார் பாஸ் எம்பி முஜாஹிட் யூசுப் ராவா.
ஹுடுட் சட்டத்தின் அமலாக்கம் அரசமைப்புக்கு உட்பட்டதா இல்லையா என்பது “விவாதத்துக்குரியது” என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அதன்மீது ஒரு முடுவெடுப்பதற்குமுன் “ஆரோக்கியமான விவாதத்துக்கு” இடமளிக்க வேண்டும் என்றார்.
லிம்மிம் யோசனை குறித்துக் கருத்துரைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதற்கு, “இந்த விவகாரமே இன்னும் ஆரோக்கியமாக விவாதிக்கப்படவில்லை என்பதால் அது அவசரப்பட்டுத் தெரிவிக்கப்பட்ட யோசனை”, என யூசுப் ராவா கூறினார்
தோ பாருடா….