ஜிஎஸ்டி எதிர்ப்பாளர்கள் இரவை லாக்-அப்பில் கழிக்க நேரலாம்

protestestorபொருள், சேவை வரி  தொடர்பில்  106  கேள்விகளுக்கு  விடை  கோரி,  பெட்டாலிங்  ஜெயாவில்  உள்ள  கூட்டரசுப்  பிரதேச  சுங்கத் துறை  வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டம்  நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் கைது  செய்யப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்குத்  தலைமைதாங்கிய  எஸ். அருட்செல்வனும்  கைதானவர்களில்  ஒருவர்.

“கேள்விகளுக்குப்  பதில் கிடைக்கும்வரை  இரவையும்  இங்கேயே  கழிக்கத்  தயார்”,  என்று  அருட்செல்வன்  முன்னதாக  மலேசியாகினியிடம்  தெரிவித்திருந்தார்.

அந்த  ஆர்ப்பாட்டக்காரர்கள் சுங்கத் துறை  வளாகத்தில் உள்ள  ஜிஎஸ்டி  தகவல்  மையத்துக்கு  அருகில்   காலையிலிருந்து  உள்ளமர்வுப்  போராட்டத்தில்  ஈடுபட்டிருந்தனர். அவர்களைக்  கலகத்  தடுப்புப்  போலீசார்  கண்காணித்து  வந்தனர்.

அக்கூட்டத்தில்  பாஸ்  ஆராய்ச்சி  மைய  இயக்குனர்  டாக்டர்  சுல்கிப்ளி  அஹ்மட்,  பிஎஸ்எம்  தலைவர்  முகம்மட்  நசிர்  ஹஷிம், தேசிய  இலக்கியவாதி  ஏ.சமட்  சைட், கோலா  கிராய்  எம்பி  முகம்மட்  ஹட்டா  ரம்லி, சுங்கை  சிப்புட்  நாடாளுமன்ற  உறுப்பினர் டாக்டர்  மைக்கல்  ஜெயகுமார்  தேவராஜ் போன்றோர்  காணப்பட்டனர்.