பக்கத்தான் ரக்யாட், போலீஸ் படைத் தலைவர்(ஐஜிபி) காலிட் அபு பக்கார் நாடாளுமன்ற உறுப்பினரின் சலுகையைமீறி நடந்து கொண்டார் என்பதால் அவரை நாடாளுமன்ற விசாரணைக்கு உட்படுத்த அனுமதி கோரியுள்ளது.
லெம்பா பந்தாய் எம்பி நூருல் இஸ்ஸா அன்வார் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்காக அவரைக் கைது செய்த காலிட், நூருலின் நாடாளுமன்றச் சலுகைகளை மீறினாரா என்பதைக் கண்டறிய ஐஜிபியை அக்குழுவின் விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டு டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் மக்களவைத் தலைவரிடம் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவை மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியாவின் அலுவலகம் பெற்றுக்கொண்டது. இப்போது பண்டிகாரின் பதிலுக்காக பக்கத்தான் காத்திருக்கிறது.