கூட்டரசு அரசாங்கம் நீர் உடன்படிக்கையில் உள்ள நிபந்தனைகள்படி நடந்துகொள்ள இணக்கம் தெரிவித்ததால் நிர் உடன்படிக்கை மீதான பேச்சுகளைத் தொடர சிலாங்கூர் மாநிலம் ஒப்புக்கொண்டதாக அம்மாநில மந்திரி புசார் அஸ்மின் அலி கூறினார்.
“முதன்மை உடன்படிக்கையின்படி நடந்துகொள்ள கூட்டரசு அரசாங்கம் ஒப்புக்கொண்டிருப்பதாக எரிபொருள், பசுமைத் தொழில்நுட்பம், நீர்வள அமைச்சிடமிருந்து கடிதம் வந்துள்ளது.
“அதனால் பேச்சுகளைத் தொடர நாங்களும் ஒப்புக்கொண்டோம்”, என அஸ்மின் தெரிவித்தார்.
இரண்டு வாரங்களுக்குமுன், கூட்டரசு அரசாங்கம் “உடன்படிக்கையின் நிபந்தனைகளை மீறிவிட்டதாகவும்” அதனால் உடன்படிக்கை முறிந்துபோனதாகவும் நீட்டிக்கப்படாது என்றும் அஸ்மின் அறிவித்திருந்தார்.
மாநிலத்தின் மேலிடத்து உத்தரவு வந்தவுடன் உடன்படிக்கை இரத்து என்ற வசனம் மலை ஏறி விட்டதோ?. எல்லாம் அவன் செயல்?.
மத்திய அரசின் மூக்கை உடைத்து ஆணவத்தைத் தகர்த்து அடி பணிய வைத்திருக்கிறார் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், வாழ்க…
அரசியல் அப்பு…
இவரே status போடுவாறான் ..அப்புறம் இவரே like பண்ணுவாராம்..என்ன அப்பு.