ஹாடியுடன் உறவுகளை முறித்துக் கொண்டது டிஏபி

tiesடிஏபி  பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்குடன்  உறவுகளைத்  துண்டித்துக்  கொண்டிருக்கிறது. “நேர்மையற்ற” ஒருவருடன்  இணைந்து பணியாற்ற  முடியாது  என்று  அது  கூறியது.

நேற்றிரவு  நடைபெற்ற மத்திய  நிர்வாகக்  கூட்டத்தில்  இம்முடிவு  எடுக்கப்பட்டது. இம்முடிவினால்  “பக்கத்தான் ஓர்  இக்கட்டான  நிலைக்குத் தள்ளப்படும்”  என்பதை  அது  உணர்ந்தே  உள்ளது.

பிகேஆரும்  டிஏபியும்  இணக்கம்  தெரிவிக்காத  நிலையிலும்    கிளந்தானில்  ஹுடுட்டைக்  கொண்டுவருவதற்காக  தனி  உறுப்பினர்  சட்டவரைவை  ஹாடியே  நாடாளுமன்றத்தில்  தாக்கல்  செய்வதுதான்  இம்முடிவுக்குக்  காரணமாகும்.

“டிஏபியால்  நேர்மையற்ற, கண்ணியமற்ற  செயல்களை விடாமல்  செய்துவரும்  ஹாடி  ஆவாங்  போன்ற  பாஸ்  தலைவருடன்  இணைந்து  பணியாற்ற  முடியாது.

“பக்கத்தான் ரக்யாட்  தலைவர்களில்  ஒருவர்  என்ற  முறையில்  ஹாடி  மீதிருந்த   நம்பிக்கை  போய்விட்டது. அவருடன் உறவுகளை  முறித்துக்  கொள்கிறோம். அவருடன்  இணைந்து  பணியாற்ற  மாட்டோம்”, என  டிஏபி  தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  எங்  கூறினார்.