ஹுடுட் சட்டம் சாத்தியமில்லை என்கிறார் சட்ட அமைச்சர்

nancyஇந்நாட்டில்  ஹுடுட்  சட்டம்  கொண்டுவருவது  பொருத்தமற்றது  எனச்  சுற்றுலா  அமைச்சர்  நஸ்ரி  அப்துல் அசீஸ்  மொழிந்ததை  வழிமொழிந்திருக்கிறார் நடப்பில்  சட்ட  அமைச்சர்  நன்சி  ஷுக்ரி.

நஸ்ரி, நேற்று  இந்நாட்டில்  ஹுடுட்  கொண்டு  வருவது  சாத்தியமிலலை  என்றும்  அதனால்  அதைப்  பற்றிப்  பேசுவது  தேவையற்றது  என்றும்  கூறியதாக  அறிவிக்கப்பட்டிருந்தது.

“நஸ்ரி  சொன்னதை  நானும்  ஒப்புக்கொள்கிறேன்.ஹுடுட்டைக்  கொண்டுவருவது  எளிதல்ல”, என்று  நன்சி ஷுக்ரி  நாடாளுமன்ற வளாகத்தில்  செய்தியாளர்களிடம்  கூறினார்.

அதன்  விளைவாக ஒரே வழக்கில்  ஹுடுட் சட்டத்தின்படியும்  சிவில்  சட்டத்தின்படியும்  இரண்டு  விசாரணைகள்  மேற்கொள்ளப்படும்  அபாயமும்  உள்ளது என்றாரவர்.

பிஎன்  சார்பாக  அவர்  பேசத்  தயாராக  இல்லை. ஆனால், ஒரு  சரவாக்கியர்  என்ற  முறையில்  கருத்துத்  தெரிவிக்க  முன்வந்த அவர்  அம்மாநிலத்தில்  அது  வரவேற்கப்படாது  என்றார்.

“ஹுடுட்டை முன்வைத்து  சரவாக்கில்  வாக்கு  பெற  முடியாது”, என்றவர் தெரிவித்தார்.