ஜிஎஸ்டியைத் தள்ளி வைப்பீர்: பெர்காசா இளைஞர்கள் கோரிக்கை

perkasaபொருள், சேவை  வரியின்  தாக்கம்மீது  விரிவான  ஆய்வு  செய்யப்பட  வேண்டும்  அதுவரையில்  அதன்  அமலாக்கத்தைத்  தள்ளிவைக்க  வேண்டும்  என  பெர்காசா  இளைஞர்  பிரிவு  கேட்டுக்கொண்டிருக்கிறது.

இவ்வரியினால்  நடுத்தர,  குறைந்த  வருமானம்  பெறுவோர்  பாதிக்கப்படாதிருக்க  அதை  முறையாக  ஆராய்ந்து   திருத்தங்கள்  செய்யப்பட  வேண்டும்  என்று   பெர்காசா  இளைஞர் பிரிவின்  தகவல் தலைவர் ஸுகைரில்  முகம்மட்  ஒஸ்மான்  கூறினார்.

“ஜிஎஸ்டி  நாட்டின்  பொருளாதார  வளர்ச்சிக்கு  உதவலாம். ஆனால், அதற்காக  மக்களுக்குச்  சிரமத்தைக்  கொடுக்கக்  கூடாது”, என்றார்.

எல்லா  அத்தியாவசியப்  பொருள்களுக்கும்  சேவைகளுக்கும்  ஜிஎஸ்டி–யிலிருந்து  விலக்களிக்கப்பட  வேண்டும்.

எரிபொருள், வீட்டு  மின்சாரப்  பயனீடு, ஏடிம்  சேவைகள்,  கார்  காப்புறுதி,  அஞ்சல்  சேவைகள்,  அடுக்குமாடி  நிர்வாகச்  செலவுகள்,  மருத்துவச் சேவைகள்  போன்றவற்றுக்கு  ஜிஎஸ்டி  வரி விதிக்கக்  கூடாது  என்றவர்  கூறினார்.