நேற்று கிளானா ஜெயா சுங்கத் துறை வளாகத்தில் ஜிஎஸ்டி- எதிர்ப்பாளர்கள் 80-பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்தின்போது தங்கள் சகாக்கள் சிலர் நடத்தப்பட்ட விதத்துக்கு பக்கத்தான் ரக்யாட் எம்பிகள் கண்டனம் தெரிவித்துக் கொண்டனர்.
இரு எம்பிகள்- பிஎஸ்எம்-இன் சுங்கை சிப்புட் எம்பி டாக்டர் மைக்கல் ஜெயகுமார், பாஸ் கோலா கிராய் எம்பி டாக்டர் ஹட்டா ரம்லி- ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.
டிஏபியைச் சேர்ந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள்- லானாங் எம்பி அலிஸ் லாவ், ஸ்தம்பின் எம்பி ஜூலியன் டான், புக்கிட் மெர்தாஜாம் எம்பி ஸ்டீபன் சிம், கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு- போலீசாருடன் நிகழ்ந்த தள்ளுமுள்ளுவில் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
சார்ல்ஸ் இப்போது மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். லாவ் மருத்துவமனை செல்ல வேண்டும் என்ற மருத்துவர்களின் ஆலோசனையைப் புறக்கணித்து விட்டு நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.


























சிகப்பு தலையர்கள் தடி கொண்டு தாக்கியதால் ….
dap படம் காட்டி முடிச்சிட்டான்…